வெங்கட் பிரபுவின் 50-வது பிறந்த நாள் ஸ்பெஷலாக கமலா சினிமாஸ் கொடுத்த ட்ரீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் குமார் மற்றும் விஜயை வைத்து ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் தனது 50-வது பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட உள்ள நிலையில் கமலா சினிமாஸில் சிறப்பு திரையிடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் 50-வது பிறந்த நாள் ஸ்பெஷலாக கமலா சினிமாஸ் கொடுத்த ட்ரீட்

வெங்கட் பிரபு

Published: 

06 Nov 2025 20:20 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி பலப் படங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) தொடர்ந்து சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு நாளை 07-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தனது 50-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இவரது 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கமலா சினிமாஸ் சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னதாக வெளியான சரோஜா படம் திரையிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த சரோஜா:

இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சரோஜா. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரகாஷ் ராஜ், சிவன், வேகா, நிகிதா, பிரேம்ஜி, வைபவ், எஸ்.பி.சரண், சம்பத் ராஜ், போஸ் வெங்கட், அமிர்தா, அம்மு, நாகேந்திரன், ரவிகாந்த், கிருஷ்ணமூர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஆட்டம் தொடங்கியது… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

கமலா சினிமாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய மாரி செல்வராஜ்