அந்த விஷயத்தில் கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஓபனாக பேசிய சிரஞ்சீவி

Chiranjeevi About Kamal Haasan: மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் நடைபெறும் வேவ்ஸ் (WAVES) கருத்தரங்கில் சிரஞ்சீவி தான் நடிகராக மாறிய பின்னணி குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். நடிகர் கமல்ஹாசன் குறித்து சிரஞ்சீவி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த விஷயத்தில் கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி

கமல்ஹாசன் - சிரஞ்சீவி

Published: 

01 May 2025 18:18 PM

கமல்ஹாசன் (Kamal Haasan)   தற்போது மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னத்துடன் இணைந்து இந்தப் படத்துக்காக கமல்ஹாசன் கதை எழுதியுள்ளார். சினிமாவில் அவருக்கு தெரியாத கலைகளே இல்லை என சொல்லலாம். கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குநர் என சினிமாவில் அவர் செய்துள்ள பட்டியல் மிக நீளம். லீட் ரோலில் நடிப்பதற்கு முன் நிறைய படங்களில் நடன உதவியாளராக பணியாற்றியிருக்கிறார் கமல்ஹாசன். நிறைய படங்களுக்கும் அவர் நடனம் அமைத்திருக்கிறார். குறிப்பாக விருமாண்டி படத்தில் கொம்புல பூவ சுத்தி பாடலுக்கு நடன இயக்குநர் இல்லாமல் இவரே நடனம் அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் வேவ்ஸ் (WAVES) எனப்படும்  வேர்ல்டு ஆடியோ விஷுவல் எண்டர்டெயின்மென்ட் சப்மிட் (World Audio Visual Entertainment Summit) தற்போது நடந்து வருகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். சினிமாவில் புதுமை ஏற்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. வருகிற மே 4, 2025 அன்று வரை இந்த கருத்தரங்கு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள பிரபல திரையுலக கலைஞர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஹேமா மாலினி, மோகன்லால், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தொகுத்து வழங்கினார்.

சிரஞ்சீவி மெகா ஸ்டாராக மாறியது எப்படி?

இந்த உரையாடலின் போது சிரஞ்சீவி பேசியதாவது, ”சிறு வயது முதல் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. சிறிய வயதில் நான் என் குடும்பத்தினர் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் டான்ஸ் ஆடுவேன். அவர்கள் நான் நன்றாக ஆடுவதாக என்னை ஊக்கப்படுத்துவார்கள். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பெரும் கனவுடன் சென்னை வந்தேன். அங்கே ஏற்கனவே என்டிஆர், ஏஎன்ஆர், கிருஷ்ணா, ஷோபன் பாபு என நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருந்தார்கள். ஒரு ஸ்டாராக ஆவதற்கு என்னிடம் என்ன தனிப்பட்ட தகுதிகள் இருக்கிறது என என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

கமல்ஹாசன் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – சிரஞ்சீவி

 

கடந்த 1977 ஆம் ஆண்டு நான் நடிப்பு பயிற்சி பெற்ற போது, நான் மிதுன் சக்கரவர்த்தியின் மிருகயா என்ற படத்தை பார்த்தேன். அது எனக்கு முன்மாதிரியாக இருந்தது. அந்த கதாப்பாத்திரத்தை பார்த்த பிறகு நான் பக்கத்து வீட்டு பையன் போல உண்மைக்கு நெருக்கமாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதே மாதிரி நான் ஷோலே படத்தில் அமிதாப் பச்சன் தைரியமாக சண்டையிடுவதை பார்த்த பிறகு அது போல நானும் சண்டையிட வேண்டும் என நினைத்தேன். நடனத்தை பொறுத்த வரை கமல்ஹாசன் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர்களிடம் கற்றதை வைத்து கடினமாக உழைத்து இன்று நான் உங்கள் முன்னால் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.