திரையுலகில் 50 ஆண்டுகள்…. ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து

50 Years of Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், அன்புடனும் போற்றுதலுடனும் நான் அவரது வெற்றிப்பயணத்தை கொண்டாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகள்.... ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

Published: 

13 Aug 2025 16:53 PM

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன்  (Kamal Haasan), ரஜினிகாந்த் (Rajinikanth)உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15, 1975 அன்று வெளியான படம் அபூர்வ ராகங்கள். அன்று தான் ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் கோலிவுட் கேட்டை திறந்து உள்ளே நுழைந்த நாள். சரியாக 50 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிப்பில் கூலி (Coolie) திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. திரையுலகில் 50 ஆண்டுகள் என்ற சாதனையை செய்திருக்கும் ரஜினிகாந்த்திற்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 75 வயதிலும் ஹீரோவாகவே நடித்து வரும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் கூலி படத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் கூலி படத்துக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரையுலகில் அரை நூற்றாண்டை கடந்திருக்கிறார் நண்பர் ரஜினிகாந்த். அன்புடனும் போற்றுதலுடனும் நான் அவரது வெற்றிப்பயணத்தை கொண்டாடுகிறேன். இந்த தருணத்தில் அவரது கூலி படம் உலக அளவில் பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். பவர் ஹவுஸ் லோகேஷ் கனகராஜ், நம் திரைத்துறையின் தூண்களில் ஒருவரான கலாநிதி மாறன், புதுமையால் சிறப்பு செய்திருக்கும் அனிருத் மற்றும் உயிர் கொடுத்திருக்கும் நண்பர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, ஆமிர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் ஆகியோருக்கு வாழ்த்துகள். அதே போல என் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : 65 ஆண்டுகளை நிறைவு செய்தது களத்தூர் கண்ணம்மா – கமல்ஹாசனுக்காக சிறப்பு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமிர்கான், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் கூலி. இந்தப் படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் படத்துக்கு பிறகு கிரிஷ் கங்காதரனுடன் லோகேஷ் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.