Kamal Haasan : இளையராஜா எனக்கு அண்ணனும் கூட.. கமல்ஹாசன் எமோஷனல் ஸ்பீச்!

Ilaiyaraaja at 50th Year Celebration : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் சினிமாவில் 50 வருட சினிமா பயணத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா இன்று 2025, செப்டம்பர் 13ம் தேதியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kamal Haasan : இளையராஜா எனக்கு அண்ணனும் கூட.. கமல்ஹாசன் எமோஷனல் ஸ்பீச்!

கமல்ஹாசன் மற்றும் இளையராஜா

Updated On: 

13 Sep 2025 21:57 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் இளையராஜா (Ilaiyaraaja). இவர் இந்த 2025ம் ஆண்டோடு சினிமாவில் சுமார் 50 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். மேலும் சமீபத்தில் லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி (Symphony) இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய, முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இளையராஜாவின் 50 வருட சினிமா பங்களிப்பை முன்னிட்டு, தமிழக அரசின் (Tamil Nadu Government) சார்பான பாராட்டுவிழா, (Ilayaraja’s Appreciation Ceremony) இன்று 2025 செப்டம்பர் 13 ஆம் தேதியில், சென்னை, நேரு உள் அரங்கத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK.Stalin), நடிகர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan), ரஜினிகாந்த் (Rajinikanth) உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல்ஹாசனும், இளையராஜாவும் இணைந்து, “அமுதே தமிழே” என்ற பாடலை பாடி அசத்தியிருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் இடையே திடீரென எழுந்த கமல்ஹாசன், அங்கு ஒலிக்கும் பாடலின் பட்டியலை யார் கொடுத்தார் என தெரிவித்திருந்தார். அது வேறு யாருமில்லை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் STR49.. – இசையமைப்பாளர் யார் தெரியுமா?

இளையராஜா எனக்கும் அண்ணன்தான் – கமல்ஹாசன் :

இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கமல்ஹாசன், இசைஞானி எனது அண்ணன்னுதான் என்று, இளையராஜாவிற்காக பாடல் ஒன்றை பாடியிருந்தார். இதில் கமல்ஹாசன் பேசிய போது, இசைஞானி இளையராஜா கண்கலங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவின் வீடியோ

முதல்வர் ஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ரசிகர்களிடம் பேசிய கமல்ஹாசன், “இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவிற்கு நான்தான் பி.ஆர்.ஓ. என்னைப்போல மிகப்பெரிய ரசிகரான ஒருவர்தான், இங்கு கேட்கும் பாடலின் பட்டியலை கொடுத்தவர். அவர் வேறு யாருமில்லை, நம் முதல்வர்தான்.

இதையும் படிங்க : கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்.. அட இவரா?

இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கும் அனைத்து பாடல்களின் லிஸ்டையும் அவர்தான் கொடுத்துள்ளார்” என அவர் கூறியிருந்தார். மேலும் நிகழ்ச்சியில், தனது படத்தின், பாடல்களை இளையராஜாவுடன் இணைந்து ரசித்துவந்தார் கமல்ஹாசன். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழ் பிரபலங்கள் :

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், தலைமையில் இந்த இளையராஜாவின் 50வது வருட பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்கியில், முதல்வருடன், இளையராஜா, ரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன் என இணைந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.

மேலும் இவர்களுடன் தமிழ், பிரபல நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், காரத்தி, பிரபு, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா, மிஷ்கின் மற்றும் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். இளையராஜாவின் 50வது வருட சினிமா பயணத்திற்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.