Arasan: சிலம்பரசனின் ‘அரசன்’ பட ப்ரோமோ.. தியேட்டர் மற்றும் யூடியூப் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Arasan Movie Promo Release Update: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் சிலம்பரசன். இவர் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் அரசன். இப்படத்தின் ப்ரோமோ ரிலீஸ் தேதி அறிவித்து கிட்டத்தட்ட 2 முறை தள்ளிப்போன நிலையில், தற்போது உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Arasan: சிலம்பரசனின் அரசன் பட ப்ரோமோ.. தியேட்டர் மற்றும் யூடியூப் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சிலம்பரசனின் அரசன்

Published: 

12 Oct 2025 17:48 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் பட்டியலில் இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் தரமான கதைக்களத்தில் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2) படமானது வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள படம்தான் அரசன் (Arasan). இந்த படமானது ஆரம்பத்தில் STR49 என அழைக்ப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அரசன் என்று வெளியாகியிருந்தது. நடிகர் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இப்படத்தின் ப்ரோமோ வீடியோ எப்போது வெளியாகவும் என ரசிகர்கள் எதிர்பாராது காத்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அரசன் படம் ப்ரோமோவானது, திரையரங்கு மற்றும் யூடியூப் போன்றவற்றில் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: வாழை 2 உருவாகிறதா? எனக்கு அப்படி படம் பண்ணனும் என ஆசை – மாரி செல்வராஜ் ஓபன் டாக்!

அரசன் பட ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தொடர்பாக கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோவானது வரும் 2025 அக்டோபர் 16ம் தேதியில் மாலை 6 : 02 மணியளவில் திரையரங்குகளில் ரசிகர்களுக்காக வெளியாகவுள்ளதாம். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கான டிக்கெட் முன்பதிவும் இன்று தொடங்குவதக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளங்களில் 2025 அக்டோபர் 17ம் தேதியில் காலை 10:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!

இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்திய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வெளியாகுவதற்கு ஒரு நாள் முன்னே திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில் சிலம்பரசனுக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது பற்றியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது :

மேலும் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறுவடைந்ததாக கூறப்பட்டநிலையில், வரும் 2025 நவம்பர் அல்லது அக்டோபர் இறுதி முதல் ஷூட்டிங் தொடங்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது தனுஷின் வட சென்னை படத்தின் கதைக்களத்தை தொடர்புபடுத்தி எடுப்பதும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிற்து.

இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சாய் பல்லவில், சமந்தா மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகைகளில் யாராவது ஒருவர் நடிப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.