பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் – ஊர்வசி.. புது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு!
Parimala And Co Movie Announcement: கடந்த 2025ம் ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி இணைந்து நடித்துவந்தனர். தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரிமளா அண்ட் கோ திரைப்படம்
கோலிவுட் சினிமாவில் குடும்பம் தொடர்பான எமோஷனலான திரைப்படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர்தான் பாண்டிராஜ் (Director Pandiraj). இவர் சூர்யா (Suriya) முதல் கார்த்தி வரை பல்வேறு நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menen) இணைந்து நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக ஹிட் கொடுத்திருந்தது. அந்த வகையில், இவரின் இயக்கத்தில் புது படம் தயாராகிவந்தாக கூறப்பட்டது.
இதில் ஜெயராம் (Jayaram) மற்றும் ஊர்வசி (Urvashi) இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்திற்கு படக்குழு “பரிமளா அண்ட் கோ” (Parimala and Co ) என டைட்டில் வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வானில் ஒரு திடீர் மாற்றம்… வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களைப் போலவே – வெளியானது சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லர்!
ஜெயராம் மற்றும் ஊர்வசியின் பரிமளா அண்ட் கோ படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்த பதிவு:
A new story begins… 🎬
Director @pandiraaj_dir’s next titled #ParimalaandCoWatch the title teaser now!
▶️https://t.co/9P4QMcecVr #Jayaram #Urvasi @DirectorMysskin @pradeepERagav @isanjkayy @Ananthika108 @iamSandy_Off @gkmtamilkumaran @santoshsoban @iYogiBabu… pic.twitter.com/LlFsLaAiEh— Lyca Productions (@LycaProductions) May 1, 2026
இந்த பரிமளா அண்ட் கே படத்தில், ஜெயராம் மற்றும் ஊர்வசி லீட் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் மிஷ்கின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சிங்கம்புலி, அனந்திகா சனில்குமார், சாண்டி, சந்தோஷ் சோபன் மற்றும் யோகி பாபு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு குடும்ப கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா மற்றும் நடிகை அனந்திகா இருவருமே, ஜெயராம் மற்றும் ஊர்வசியின் மகள்களாக நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: புது ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராம் சரணின் ‘பெடி’ படக்குழு – விவரங்கள் இதோ!
அந்த வகையில் இது குடும்ப பொழுதுபோக்கு திரில்லர் படமாக தயாராகியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். இதில் கிட்டத்தட்ட பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட் படமாக தயாராகியுள்ளது. தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.