ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜூ தமிழ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Jana Nayagan Movie Satellite Rights: தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜன நாயகன்
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், ரேவதி, நரேன், பிரியாமணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கடைசிப் படம் இது என்பதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் ஜன நாயகன் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலக உள்ள காரணத்தால் அவருக்கு ஃபேர்வல் கொடுக்கும் விதமாக சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பாடல்களை இந்த இசை வெளியீட்டில் பாடகர்கள் பாட உள்ளது குறித்த படக்குழு முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜூ 5:
இந்த நிலையில் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பிறகு எந்த தொலைக்காட்சியில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் ஒளிபரப்பாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தான் ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளதாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..
Happy to announce that @ZeeTamil has bagged the Satellite rights 🔥#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @VishalMMishra @Lyricist_Vivek… pic.twitter.com/cVa4giu1Rd
— KVN Productions (@KvnProductions) December 19, 2025
Also Read… அரசன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது – விஜய் சேதுபதி