அந்த காட்சியில் நடிக்கும் போது பதற்றத்தில் என்னை அறியாமல் நடுங்கினேன் – நடிகர் ஜெய்

Actor Jai: நடிகர் ஜெய் தற்போது புதிதாக நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜெய் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த காட்சியில் நடிக்கும் போது பதற்றத்தில் என்னை அறியாமல் நடுங்கினேன் - நடிகர் ஜெய்

நடிகர் ஜெய்

Published: 

02 Jul 2025 14:00 PM

நடிகர் ஜெய் (Actor Jai) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இந்தப் படத்தை இயக்குநர் பாபு விஜய் இயக்கி உள்ளார். மேலும் பாபு விஜய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜெய் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே போலீஸ் கஸ்டெடியில் அவர்கள் ஜெய்யை துன்புறுத்துவது போன்ற காட்சி அமைத்து இருந்தது. இதுகுறித்து பேசிய நடிகர் ஜெய் ”இது மாதிரியான சம்பவங்கள் நமது சமூகத்தில் தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் போலீஸ் கஸ்டடி காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது பதற்றத்தில் என்னை அறியாமலே என் உடல் நடுங்க ஆரம்பித்தது என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், பெரும்பாலும் நான் மனிதர்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அதிக அளவில் முக்கியதுவம் கொடுப்பேன். அப்படிதான் இந்தப் படத்திற்கும் நான் சம்மதித்தேன். சமூகத்தில் தற்போது நடைபெறும் முக்கிய பிரச்னையை மையப்படுத்தியே இந்தப் படம் உருவாகி உள்ளது” என்றும் நடிகர் ஜெய் தெரிவித்து இருந்தார்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் ஜெய் படத்தின் போஸ்டர்:

நடிகர் ஜெய் நடிப்பில் முன்னதாக ஹிட் அடித்தப் படங்கள்:

கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் நாயகனாக நடித்த பகவதி படத்தில் அவரது தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ஜெய். இந்தப் படத்தில் நடித்த பிறகு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை 28 படத்தில் நடித்து இருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, சென்னை 28 பாகம் 2, கலகலப்பு 2, குற்றம் குற்றமே, அன்னபூரணி, பேபி அண்ட் பேபி என அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.