ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி – அடுத்த இயக்குநர் இவரா?

Thalaivar 173 Movie Update : நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தினை இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் இன்று அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டது இணையத்தில் வைரலானது.

ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி - அடுத்த இயக்குநர் இவரா?

ரஜினி

Published: 

13 Nov 2025 18:40 PM

 IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) கூலி படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான ட்விஸ்டை வைத்து இருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டில் திரையரங்குளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினியின் அடுத்தடுத்தப் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி முன்னதாக நடிகர்கள் கமல் ஹாசல் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போது அவர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள தலைவர் 173 படத்தின் தொடர்பான அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவித்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இன்று அறிவித்ததால் அடுத்த யார் அந்தப் படத்தை இயக்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் 173 படத்தை இயக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 173 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சின்ன வயசு க்ரஷ் யார்?  ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்