12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா?

Evergreen actress Shobana is set to return to Tamil cinema: தமிழ் சினிமாவில் கடந்த 80 மற்றும் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சோபனா. இவர் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா?

நடிகை சோபனா

Published: 

16 Mar 2026 11:46 AM

 IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய மொழிகளில் நாயகியாக நடித்து வந்தார் நடிகை சோபனா. தொடர்ந்து 80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் தனது நடிப்பு மற்றும் நடத்தால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1984-ம் ஆண்டு நாயகியாக அறிமுகமான நடிகை சோபனா பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வந்தார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் இறுதியாக தமிழ் சினிமாவில் நடித்தப் படம் கோச்சடையான். கடந்த 2014-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

மேலும் கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் சோபனாவின் புகைப்படம் மட்டும் ரஜினிகாந்தின் உயிரிழந்த மனைவி என்று காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சோபனா மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தலைவர் 173 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா:

12 ஆண்டுகளுக்குப் பிறகு, என்றும் இளமை மாறாத நடிகை ஷோபனா தமிழ் சினிமாவிற்குத் திரும்பத் தயாராகி வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ‘தலைவர் 173’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நான்காவது முறையாக அவர் ஜோடி சேர உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியாகும் பட்சத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானதும் ஏக்கத்தைத் தூண்டுவதுமான இந்த ஜோடியை மீண்டும் ஒருமுறை வெள்ளித்திரையில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… அண்ணா மாதிரி பார்த்தேன் அந்த இயக்குநர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல – மாஸ்டர் மகேந்திரன்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Mamitha Baiju: என்னோட ஒரிஜினல் பெயர் அதுதான்.. மமிதா பைஜூ சொன்ன உண்மை!

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்