Idly Kadai : தனுஷின் பிறந்தநாளில் வெளியான ‘இட்லி கடை’ படத்தின் புதிய போஸ்டர்!

Idly Kadai Movie Dhanushs Birthday Special Poster : கோலிவுட் சினிமாவில் பலவித திறமைகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் இட்லி கடை. இன்று 2025, ஜூலை 28ம் தேதியில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Idly Kadai :  தனுஷின் பிறந்தநாளில் வெளியான இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர்!

இட்லி கடை பட சிறப்பு போஸ்டர்

Updated On: 

28 Jul 2025 19:16 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார்.  திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த இட்லி கடை திரைப்படமானது முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்துடன் மாறுபட்ட படமாக உருவாகியுள்ளது. இட்லி கடை திரைப்படமானது தனுஷின் இயக்கத்தில் 4வது உருவாகும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் 2025, ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷ், தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இட்லி கடை படக்குழு தனுஷின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அருண் விஜய்யும் (Arun VIjay) தனுஷை வாழ்த்தி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடிக்க சொல்லித்தரும் தனுஷ் – வைரலாகும் வீடியோ!

இட்லி கடை படக்குழு வெளியிட்ட தனுஷின் பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் :

தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அருண் விஜய் :

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தில் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அருண் விஜய் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இரு மாபெரும் நடிகர்களும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது . இந்நிலையில் நடிகர் அருண் விஜய், தனுஷிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்டுள்ளார். இட்லி கடை படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி.. முதல் பாடல் புரோமோ குறித்து வெளியான அறிவிப்பு!

அருண் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பதிவு :

இட்லி கடை படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பு

இந்த இட்லி கடை திரைப்படமானது ஆரம்பத்தில், கடந்த 2025, ஏப்ரல் 10 ஆம் தேதியில் வெளியாகவிருந்தது. பின் இப்படத்தின் ஷூட்டிங் தாமதமான நிலையில், படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியிருந்தது. இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலிஸிற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.