கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

Theatre Release Movies List: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த வாரம் கிறிஸ்தும்ஸ் பண்டிகையை மக்கள் கொண்டாட உள்ள நிலையில் நாளை வெளியாக உள்ள படங்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

படங்கள்

Published: 

24 Dec 2025 22:14 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் உருவாகும் படங்களும் தமிழகத்தில் வெளியாகி வருகின்றது. இதில் தமிழ் மொழிப் படங்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் உருவாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதன் காரணமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை: நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து உள்ள படம் சிறை. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ள நிலையில் படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடிகர்கள் எல்கே அக்ஷய் குமார், ஆனந்த தம்பிராஜா, அனிஷ்மா அனில்குமார், பாண்டியாக ஹரிசங்கர் நாராயணன், ரம்யா சுரேஷ், சிஜு வில்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரெட்ட தல: நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ரெட்ட தல. இந்தப் படத்தை இயக்குநர் க்ரிஷ் திருக்குமரன் எழுதி இயக்கி உள்ளார். இதில் அருண் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, பி. சாய் குமார், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, ராமச்சந்திரன் துரைராஜ், பாலாஜி முருகதாஸ், சாய் தீனா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… 2025ல் வெளியாகி ரசிகர்களிடையே ஹிட்டடித்த ரீ-ரிலீஸ் படங்கள்.. விஜய் படங்கள் மட்டுமே இத்தனையா?

பருத்தி: இயக்குநர் குரு எழுதி இயக்கி உள்ள படம் பருத்தி படம். இந்தப் படத்தில் நடிகை சோனியா அகர்வால் நாயகியாக நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது நடித்துள்ள படமும் நாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் நாளை 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… இயக்குநரின் மகன் டூ பான் இந்திய நாயகன்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? இவருக்கு இந்தியிலும் ரசிகர்களால் உண்டு!

“கிரிக்கெட்டை தொடரவே விருப்பமில்லை என்று நினைத்தேன்”.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா!!
"பாம்பு சட்டை போல், உரிந்து வரும் தோல்".. விஷ சிலந்தி கடியால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்திற்கான பட்ஜெட் இவ்வளவா?
"இப்படியே அவரை வைத்திருக்க முடியாது".. கருணைக் கொலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு!!