New Year: ஃபர்ஸ்ட் பார்ட் சூப்பர் ஹிட்.. 2026 கோடைக்காலத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
Tamil sequels: தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் அந்த படங்களின் வெற்றியை அடுத்ததாக அதன் பார்ட் 2 படங்களும் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் ரிலீசாகும் பார்ட் 2 படங்கள் என்னென்ன அதன் லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.

தமிழ் பார்ட் 2 படங்கள்
ஜெயிலர் 2 திரைப்படம் (Jailer 2) : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) அசத்தலான நடிப்பில் தயாராகிவரும் படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார்தான் (Nelson Dilipkumar) இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமான நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அந்த வகையில் இப்படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருகிறது. இந்த் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் தயாரான நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது இந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என ரஜினிகாந்தே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026-ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்… பிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவு!
சர்தார் பார்ட் 2 (Sardar 2):
நடிகர் கார்த்தியின் (karthi) நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படம்தான் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது குடிநீர் கடத்தல் தொடர்பான இன்டர்நேஷனல் கதைக்களத்தை மையமாக கொண்டு தயாராகியிருந்தது. கடந்த 2022ல் வெளியான இப்படம் கார்த்திக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அந்த வகையில் இப்படத்தின் தொடர்ச்சியாக சர்தார் பார்ட் 2 படம் தயாராகியுள்ளது. இதில் கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் முக்கிய வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இந்த படமும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் (Mookuthi Amman 2) :
இயக்குநர் சுந்தர் சி (Sundar C) மற்றும் நயன்தாராவின் (Nayanthara) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துவருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
இதையும் படிங்க: கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இல்லாமல் புது கதையில், இந்த மூக்குத்தி அம்மன் பார்ட் 2 தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த 2025 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்திருந்தது. இப்படமும் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் நிறைவு வீடியோ பதிவு :
Capturing the magic and dedication behind the scenes of Sundar C’s #MookuthiAmman2 🔱
A #SundarC Mega Divine Entertainer 🔥@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @kushmithaganesh @hiphoptamizha @thinkmusicindia @ReginaCassandra @iYogiBabu… pic.twitter.com/P81xnllfeW
— Vels Film International (@VelsFilmIntl) December 30, 2025
டிமாண்டி காலனி 3 படம் (Demonte Colony 3) :
இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Ganamuthu) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் தான் டிமாண்டி காலனி 3. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் அர்ச்சனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் 2வது பாகம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த டிமாண்டி காலனி 3 என்ற திகில் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமும் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.