Year Ender: 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?
Top Celebrity Marriages of 2025 : தமிழ் சினிமாவில் இந்த் 2025ம் ஆண்டில் பல் சுவாரஸ்ய விஷயங்கள் நடந்திருக்கிறது. அந்த வகையில் மக்களுக்கு நெருக்கமான பிரபலங்களில், இந்த 2025ம் ஆண்டில் எந்த நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

2025 இல் தமிழ் பிரபலங்களின் திருமணம்
சமந்தா ரூத் மற்றும் ராஜ் நிதிமோரு (Samantha Ruth Prabhu – Raj Nidimoru): நடிகை சமந்தா கடந்த 2018ம் ஆண்டில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்திருந்தார். இதை அடுத்தாக அவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நடிகை சோபிதாவை திருமணம் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் தி பேமிலி மேன் (The Family Man) என்ற வெப் தொடரை இயக்கியவர்தான் இயக்குநர் ராஜ் நிதிமோரு. இவரும் நடிகை சமந்தாவும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக பல இடங்களுக்கு சென்றுவந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகைவந்திருந்தது. இது குறித்து சமந்தாவும் சரி, இயக்குநர் ராஜ் நிதிமோருவும் சரி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திடீரெனெ நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்ததாக அறிவித்திருந்தார்.
கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதியில், கோவையில் உள்ள ஈஷாவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிலையில், இணையத்தில் கருத்துக்கள் தீயாக பரவிவந்தன.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் திருமணம் தொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட்:
சாக்ஷி அகர்வால் மற்றும் நவநீத் மிஸ்ரா (Shakshi Agarwal – Navneet Mishra):
தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடித்து அசத்தி வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதனை தொடர்ந்து அரண்மனை 3, ஃபயர் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதியில் தனது நீண்டநாள் காதலரான நவநீத் என்பவரை பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தற்போதுவரை மகிழ்ச்சியாக தனது இல்வாழ்க்கையில் இருந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழில் 2 படம்தான்.. ஆனால் பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரிகிறதா?
கிஷன் தாஸ் மற்றும் சுசித்ரா (Kishan Das and Suchitra):
தமிழில் பிரபல யூடியூபர் மற்றும் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் கிஷன் தாஸ். இவர் சுசித்ரா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அந்த வகையில் பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், இந்த ஜோடி கடந்த 202 5 ஜனவரி31ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடியும் தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் ஜோடியாக இருந்துவருகின்றனர்.
பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி (Priyanka Deshpande and Vasi):
தமிழில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரியங்கா. இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு ஏற்கனவே முதல் திருமணமான நிலையில், விவாகரத்து பெற்றுக்கொண்டார். பல வருடங்களுக்கு பிறகு, பிரபல தொழிலதிபரான வசி என்பவரை கடந்த 2025 ஏப்ரல் 16ம் தேதியில் குடும்பத்தினரின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர் மற்றும் பாவனி (Amir and Bhavani) :
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக இருந்துவந்தார் பவானி. இவர் சின்னத்தம்பி போன்ற தொலைக்காட்சி தொடரில், மேலும் அஜித் குமாரின் துணிவு படத்திலும் நடித்திருக்கிறார். பின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவரை, இணை போட்டியாளராக அமீர் என்பவர் காதலிப்பதாக கூறினார். இந்த காதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் காதல் திருமணம் செய்துகொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் 2025 ஏப்ரல் 20ம் தேதியில் நண்பர்களும் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.