பேட் கேர்ள்… டைட்டிலை போல படமும் பேட் தான் – ஓடிடியில் வெளியாகியுள்ள படத்தின் விமர்சனம் இதோ
Bad Girl Movie Review : தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான படம் பேட் கேர்ள். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது விமர்சனத்தைப் பார்ப்போம்.

பேட் கேர்ள்
தமிழ் சினிமாவில் இயக்குநர் வர்ஷா பரத் எழுதி இயக்கிய படம் பேட் கேர்ள். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக வர்ஷா பரத் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 7-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி சிவராமன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவர் முன்னதாக இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில் இவர் நடிகையாக அறிமுகம் ஆன படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இவருடன் இணைந்து நடிகர்கள் சாந்திப்ரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், தீஜய் அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் திரைப்பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் வெளியாகியுள்ள பேட் கேர்ள் படம் எப்படி இருக்கு?
நடிகை அஞ்சலி சிவராமன் ஸ்கூல் படிக்கும் போதே பெண்களுக்கே நடக்கும் ஹார்மோனல் மாற்றங்களில் இருக்கிறார். இந்த ஹார்மோனல் மாற்றத்தில் தொடர்ந்து மாத்தி மாத்தி காதலா காமமா என்று தெரியாமல் பல முடிவுகளை எடுக்கிறார். இதனால் அவரது வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதே படத்தில் கதை.
Also Read… நாளை மாலை மாஸ்க் படத்தின் ஆடியோ லாஞ்ச்… ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு!
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது டீன் ஏஜில் நடக்கும் ஹார்மோனல் மாற்றங்களை கையாள்வதற்கு பெற்றோர்கள் கண்டிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது அனைத்தும் அந்த பெண்ணின் சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று என்று கூறுவது முட்டாள் தனமான ஒன்று. தனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத பெண்ணிற்கு சுதந்திரம் என்பது சுதந்திரம் அல்ல. அவரின் வாழ்க்கையை கெடுக்கக் கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கொண்டாடுவதைவிட கேள்வி கேட்பதே மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் ரசிகர்கள் பலர் இந்தப் படத்திற்காகவா இயக்குநர் வெற்றிமாறன் தனது தயாரிப்பு நிறுவனத்தையே மூடுவதாக அறிவித்தார் என்றும் கேள்விகளை இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.
Also Read… கீதா கைலாசத்தின் வித்யாசமான நடிப்பில்… அங்கம்மாள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!