Hansika Motwani: கணவருடன் மனக்கசப்பு? – ஹன்சிகா விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் தகவல்

Hansika Motwani And Sohail Khaturian Divorce : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் காதல் கணவர் சோஹைல் கதுரியா என்பவரைக் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த தம்பதிகள் தற்போது பிரிந்து வாழ்வதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Hansika Motwani: கணவருடன் மனக்கசப்பு? - ஹன்சிகா விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் தகவல்

ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் கதுரியா

Published: 

21 Jul 2025 12:32 PM

நடிகை ஹன்சிகா மோத்வானியின் (Hansika Motwani) இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் துணை வேடம் மற்றும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்தி சினிமாவை தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் தனது நடிப்பைத் தொடர்ந்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் மாப்பிள்ளை (Maappillai) . நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் தனது நடிப்பைத் தமிழ் சினிமா பக்கம் திருப்பினார். இவர் ஆரம்பத்தை நடிகர் சிலம்பரசனுடன் டேட்டிங் செய்துவந்தார். பின் சில காரணங்களுக்காக இந்த ஜோடி இருந்தது. இந்நிலையில் மேலும் தனது தோழியின் கணவரான சோஹைல் கதுரியா (sohail kathuria) என்ற தொழிலதிபரைக், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடியானது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செய்திகளில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : சூப்பர் ஹிட்டான மோனிகா பாடல்.. சாண்டி மாஸ்டர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

சோஹைல் கதுரியா – ஹன்சிகாவின் பிரிவு :

நடிகை ஹன்சிகா மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவும் திருமணத்திற்குப் பின் கூட்டுக் குடும்பமாக வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் நடிகை ஹன்சிகா, தனது கணவரின் குடும்பச் சூழலுடன் வாழ்வதற்குச் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக , கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சோஹைல் கதுரியாலின் பெற்றோர், மேல் மாடியில் தனியாகச் சென்றுள்ளனர்.

அதற்கு பிறகும் பிரச்சனை தொடர்ந்த நிலையில், இவர்கள் இருவரும் மனக் கசப்பின் காரணமாகப் பிரிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக நடிகை ஹன்சிகா கணவரைப் பிரிந்து, மும்பையில் இருக்கும் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது தற்போது இணையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி அட்ராசிட்டி.. போட்டுடைத்த நித்யா மேனன்!

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ஹன்சிகாவின் நடிப்பில் தமிழில் படங்கள் சமீப ஆண்டுகளாக வெளியாகவில்லை. திருமணத்திற்குப் பிறகும் ஹீரோயினாக தமிழில் இவர்க்குப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். இவரும் மற்ற முன்னணி நடிகையைப் போல் கதையின் நாயகியாக கொண்ட படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.