இயக்குநர் ராமின் பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் ஹலிதா ஷமீம்!

Paranthu Poo: தமிழ் சினிமாவில் வாழ்க்கையின் எதர்த்தத்தை மையமாக வைத்து படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராமின் பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் ஹலிதா ஷமீம்!

ஹலிதா ஷமீம்

Published: 

03 Jul 2025 19:44 PM

நடிகர் சிவா (Actor Shiva) நாயகனாக நடித்து நாளை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பறந்து போ. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் ராம் இயக்கியுள்ளார். மனித உணர்வுகளை அற்புதமாக தனது படங்களின் மூலம் காட்டும் இயக்குநர் என்று பெயர் எடுத்த இவர் காமெடியை மையமாக வைத்து அப்பா மற்றும் மகனின் பாசத்தை இந்த பறந்து போ படத்தில் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகை கிரேஸ் ஆண்டனி நடிகர் சிவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பறந்து போ படத்தை பாராட்டிய ஹலிதா ஷமீம்:

படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரிவியூ காட்சிகளைப் பார்த்த பிரபலங்களும், விமர்சகர்களும் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஹலிதா ஷமீம் படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, பரந்துபோ படம் என்பது நம் உள் குழந்தையை ஈர்க்கும் ஒரு மகிழ்ச்சிகரமான படம். சினிமாவில் காம்பினேஷன் என்பது பொதுவாக இரண்டு வெற்றி இயக்குநர்கள் இணைவதை மட்டுமே குறிக்கும். மேலும் அது நமக்கு எந்த உற்சாகத்தையும் அளிக்காது.

ஆனால், ஒரு துறையில் இயக்குனர் ராமும் நடிகர் சிவாவும் இணைவது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றமாகும். அவர்கள் புதிய சுவையைக் கொண்டு வருகிறார்கள். நமக்குத் தேவை என்று எங்களுக்குத் தெரியாத ஒன்று. சிவாவின் அன்பான முட்டாள்தனத்தை ராமால் போற்றப்படுவது. கோகுல் அன்புவை என்றென்றும் துரத்துவதை என்னால் பார்க்க முடிகிறது. அஞ்சலி ராமின் கண்களால் எப்போதும் சிறப்பு வாய்ந்தவர் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த சினிமாத் துறையில் தத்துவ திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகவும் அரிதானவர்கள், அவர்களின் குரல்களைக் கேட்பது, எதிரொலிப்பது மற்றும் பெருக்குவது முக்கியம். மைனா மற்றும் கரப்பான் பூச்சி குழந்தையாக நடித்த பெண்ணுக்கு மிகுந்த அன்பும் பாராட்டுகளும் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

பறந்து போ படம் குறித்து ஹலிதா ஷமீம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: