அழகு முக்கியம் இல்லை… அன்புதான் முக்கியம்… சமூக கருத்துடன் வெளியான ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி விமர்சனம் இதோ!
Happy Raj Movie OTT Review Here: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நாயகன் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ஹேப்பி ராஜ். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஹேப்பி ராஜ்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகன், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றிநடைப் போட்டு வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல நாயகனாக நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகனாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் இறுதியாக நடித்தப் படம் ஹேப்பி ராஜ். ரொமாண்டிக் காமெடி பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்து இருந்தார். மேலும் நாயகியின் தந்தையாக நடிகர் அப்பாஸ் இந்தப் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் ஜிவி பிரகாஷ் குமாரின் தந்தையாக ஜார்ஜ் மரியம் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் படத்தின் கதை என்ன?
இந்தப் படத்தில் வாத்தியாராக இருக்கும் ஜார்ஜ் மரியாவின் ஒரே மகன் தான் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இவரின் பெயர் ஆனந்தராஜ். அதனை ஹேப்பி ராஜ் என்றே அழைப்பார்கள். ஜார்ஜ் மரியாவை ஊரில் உள்ள அனைவரும் குதிரை முட்டை என்று கிண்டலடிக்கும் விதமாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த அடையாளம் அவரை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும் அவரது மகன் ஹேப்பியை அதிக அளவில் பாதிக்கின்றது.
Also Read… கருப்பு படத்தை பார்த்தவர்கள் இதுதான் சொன்னார்கள்… நடிகர் சூர்யா கொடுத்த அப்டேட்
மேலும் அந்த குதிரை முட்டை என்ற பெயராலேயே ஹேப்பி ராஜின் காதல்களும் கைக்கூடாமல் போகிறது. சொந்த ஊரில் இருந்தால் இந்த பிரச்சனை தொடரும் என்று பெங்களூருக்கு வேலைக்கு செல்கிறார் ஹேப்பி. அங்கு காவ்யா (ஸ்ரீ கௌரி பிரியா) என்ற பெண்ணை காதலிக்கிறார். இவர்களின் காதல் கைகூட உள்ள நிலையில் ஹேப்பியின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்துகிறார் அப்பாஸ்.
அப்பாஸின் தகாத பேச்சைக் கேட்டு கோபமடைந்த ஜார்ஜ் மரியன் மீண்டும் அப்பாஸை மூக்குடைக்கும் விதமாக பேசி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இறுதியில் இவர்களின் காதல் கை கூடியதா இல்லையா என்பதை ஒரு சமூக கருத்துடன் இயக்குநர் காட்டி இருக்கிறார். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
Also Read… என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு உருகுற மனசு தான் கடவுள் – தனுஷ் பேச்சு