அசுரன் படத்தில் கென் கருணாஸ் காட்சிகர் ரீ ஷூட் செய்யப்பட்டது – ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன விசயம்

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அசுரன் படத்தின் போது நடந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அசுரன் படத்தில் கென் கருணாஸ் காட்சிகர் ரீ ஷூட் செய்யப்பட்டது - ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன விசயம்

ஜிவி பிரகாஷ் குமார்

Published: 

29 Sep 2025 12:41 PM

 IST

இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaran) இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அசுரன். இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறனே எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இவரகளுடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜேய் அருணாசலம், பசுபதி, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் நரேன், பவன், பாலா ஹாசன், எஸ்.ஆர்.பாண்டியன், தமிழ், ஏ. வெங்கடேஷ், நிதிஷ் வீரா, வேல்ராஜ், சென்ட்ராயன், மூணார் ரமேஷ் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பக தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஷூட்டிங் போது நடந்த சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்:

அதன்படி அசுரன் படத்தின் போது ஒரு காட்சியை எடுத்துவிட்டு அதற்கு பின்னணி இசை அமைப்பதற்காக வெற்றி வந்தார். அப்போது கென் கருணாஸ் கொஞ்சம் வெயிட் அதிகமாக இருந்தார். அவரைப் திரையில் பார்ப்பவர்களுக்கு தனுஷின் மகனாக காட்சியளிக்க மாடார் என்று சொன்னேன். உடனே கென் கருணாஸின் உடல் எடையை குறைக்க வைத்து  பின்பு மீண்டும் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்று ஜிவி பிரகாஷ் குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

இணையத்தில் கவனம் பெறும் ஜிவி பிரகாஷ் குமார் பேச்சு:

Also Read… கரூர் சம்பவம்… விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!