சூர்யா 46 அந்த ஹிட் படம் மாதிரி இருக்கும் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
Suriya 46 Movie Update: கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகின்ற நிலையில் சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜிவி பிரகாஷ் குமார், சூர்யா மற்றும் மமிதா பைஜூ
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜிவி பிரகாஷ் வாங்கும் இரண்டாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷ் குமார் தேசிய விருதைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக மட்டும் இன்றி நாயகனகாவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது படு பிசியாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். அதன்படி சிவகார்த்திகேயன், சூர்யா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
அல வைகுந்தபுரமுலு மாதிரி இருக்கும் சூர்யா 46:
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் இசையமைக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை தெரிவித்தார். அதில் குறிப்பாக சூர்யா 46 படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி கடுமையான உழைப்பை கொடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் முன்னதாக தெலுங்கு சினிமாவில் நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற அல வைகுந்தபுரமுலு படம் மாதிரி அனைத்து வகையிலும் சிறபபக இந்த சூர்யா 46 இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்லார்.
Also Read… ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!
இணையத்தில் கவனம் பெறும் ஜிவி பிரகாஷ் குமாரின் பேச்சு:
#GVPrakash Recent
🚀 #Suriya46 with Venky Atluri is shaping up to be in the vibe of #AlaVaikunthapuramulo! 🎬✨
🏆 Dulquer’s #AakasamloOkaTara is all set to sweep the National Awards next year! 🌟pic.twitter.com/eqtgvfsyjy
— Movie Tamil (@_MovieTamil) November 30, 2025
Also Read… தலைவர் 173-க்கு நோ… சுந்தர் சி இயக்கும் படத்தின் அப்டேட் இதோ