இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் நடிக்க இப்படிதான் வாய்ப்பு கிடைத்தது… நடிகை கிரேஸ் ஆண்டனி ஓபன் டாக்!
Actress Grace Antony: மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவர் தற்போது தமிழில் வெளியாக உள்ள பறந்து போ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆக உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை கிரேஸ் ஆண்டனி
மலையாள சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஹேப்பி வெட்டிங் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் கிரேஸ் ஆண்டனி (Actress Grace Antony). இவர் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 2019-ம் ஆண்டு இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடிகர் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்து தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை கிரேஸ் ஆண்டனி. தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்த கிரேஸ் ஆண்டனி தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்துள்ள பறந்து போ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த பறந்து போ படம் நடிகை கிரேஸ் ஆண்டனி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும்.
பறந்து போ படத்தில் நடிக்க நிவின் பாலிதான் காரணம்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கிரேஸ் ஆண்டனி இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று பேசியுள்ளார். அதில் கிரேஸ் ஆண்டனி பேசியதாவது, முதலில் நிவின் சேட்டன் (நடிகர் நிவின் பாலி) தான் எனக்கு போன் பண்ணி உனக்கு தமிழ் படம் நடிக்க ஆசை இருக்கானு கேட்டார்.
நானும் எனக்கு ஆசை இருக்குனு சொல்லிட்டேன். அப்போ இந்த மாதிரி ஒரு டைரக்டர் இருக்கார் என்று சொன்னார். அந்த நேரத்தில நிஜமாவே ராம் சார் யாருன்னு எனக்கு தெரியல ரெண்டு வருசத்துக்கு முன்னாடி. அப்போ நிவின் சேட்டன் ராம் சார் இப்போ நான் அவர் கூட ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன் ஏழு கடல் ஏழு மலைனு சொன்னார்.
பறந்து போ படக்குழுவினர் உடன் நடிகை கிரேஸ் ஆண்டனி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
அவர் உனக்கு ஒரு கதை சொல்லனும்னு இருக்கு அவர்தான் பேரன்பு படத்தோட இயக்குநர்னு சொன்னாரு. நான் பேரன்பு பாத்து இருக்கேன் மம்முட்டி சார் நடிச்சு இருக்கார். அந்தப் படம் நான் பாத்து இருக்கேன். அந்தப் படத்தின் இயக்குநர்னா அப்போ நல்ல படமா இருக்கும்னு நினைச்சேன். அப்பறம் தான் ராம் இயக்கிய படங்கள் எல்லாம் பார்த்தேன் என்றும் அதன் பிறகு கொச்சியில் ராம் சாரை சந்தித்து கதை கேட்டு பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.