நீங்க ஒரு அற்புதமான மனிதர்… அஜித் குமார் குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட பிரியா பிரகாஷ் வாரியர்
Priya Prakash Varrier Praise Actor Ajith: இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. இந்த நிலையில் அந்தப் படத்தில் நடித்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அஜித் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு வைரலாகி வருகின்றது.

அஜித் குமார், பிரியா பிரகாஷ் வாரியர்
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) அஜித்தின் மென்மையான தன்மை மற்றும் அரவணைப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறியுள்ளார். மேலும் தற்போது நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் அஜித்தை “நீங்க ஒரு அற்புதமான மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட நீண்ட பதிவில் அவர் கூறியதாவது, “எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இதை நான் ரொம்ப நாளா மனசுல வச்சுட்டு இருக்கிறேன். நான் இங்கு எழுதுறது எல்லாம் உங்க மேல எனக்கு இருக்கிற அபிமானத்தை வெளிப்படுத்த போதுமானதா இல்ல சார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் உரையாடலிலிருந்து கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும், நான் என்னை ஒருத்தர் ஒதுக்கி வச்ச மாதிரி உணரவில்லை. யாரும் ஒதுக்கி வச்ச மாதிரி உணரலன்னு நீங்க உறுதி பண்ணிட்டீங்க. நீங்க படப்பிடிப்பில் இருந்தப்போ எல்லாம் எங்க எல்லாருடைய நலனையும் விசாரிச்சீங்க.
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
நாம் அனைவரும் ஒரு குழுவா சேர்ந்து சாப்பிட்ட உணவுகள், நகைச்சுவைகள், மகிழ்ச்சியான நேரம் அனுபவிச்சது எல்லாம் பத்தி நான் சொல்லாம இருக்க முடியாது. இவ்வளவு ஆர்வம் உள்ள யாரையும் நான் சந்திச்சதில்லை. உங்களுக்குள்ள இருக்கிற சின்ன “Pinocchio” மேல எனக்கு ரொம்ப மரியாதையும் அன்பும் இருக்கு.
நீங்க குடும்பம், கார்கள், பயணம், பந்தயம் பத்தி பேசும்போது உங்க கண்கள் பிரகாசிக்கிற விதம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து, பாராட்டுகிறீர்கள். படப்பிடிப்பில் உங்க பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் நடிகர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்று.
இனி வரும் பல வருடங்கள் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன். உங்க மென்மையும் அரவணைப்பும் எனக்கு இன்னும் ரொம்பப் பிடிச்சிருக்கு, அதனாலதான் நான் நிறைய எழுதிட்டேன். நீங்க ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கை எவ்வளவு உயரத்தைக் காட்டினாலும், உங்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவம் நிலைத்து நிற்கும்.
மேலும், இதுவரைக்கும் என் கேரியரில் எனக்குப் பிடிச்ச தருணம், ஒரே ஒரு பாடலைப் பாடும் வாய்ப்புதான்னு சொல்ல முடியும், ரொம்ப சந்தோஷமா இருக்கு. “தொட்டுத் தொட்டு” அந்த காரணத்துக்காகவே ஒரு சிறப்பான தருணமா இருக்கும். அஜித் சார், GBU-ல உங்ககூட எனக்குக் கிடைச்ச அனுபவத்தை நான் எப்பவும் ரசிப்பேன்” என்றும் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.