புதிய உச்சத்தை தொட்டது கோல்டன் ஸ்பாரோ பாடல்… நீக் படக்குழு வெளியிட்ட பதிவு
Golden Sparrow Video Song | தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடல் தற்போது புதிய சாதனைப் படைத்துள்ளது.

கோல்டன் ஸ்பாரோ பாடல்
கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் நடிகர் தனுஷ் கடந்த 2025-ம் ஆண்டில் எழுதி இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் பவிஷிற்கு ஜோடியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் தற்போதைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. நடிகர் தனுஷ் நடிக்காமல் இயக்கிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உச்சத்தை தொட்டது கோல்டன் ஸ்பாரோ பாடல்:
அதன்படி இந்தப் படத்திற்கு இசையைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் குறிப்பாக கோல்டன் ஸ்பாரோ பாடல் மட்டும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 250 மில்லனுக்கு அதிகமாக பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மங்காத்தாவில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை… யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From a spark to a phenomenon – 250+ MILLION strong 📈 #GoldenSparrow keeps flying, and we’re just getting started. Let’s soar to the next horizon together. 🕊️@YouTubeIndia #250MillionHearts #NEEK pic.twitter.com/JRgIOCHrGF
— Wunderbar Films (@wunderbarfilms) January 24, 2026
Also Read… ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சர்வம் மாயா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ