Karuppu: இது God-uh Mode-uh.. யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை தாண்டிய சூர்யாவின் கருப்பு பட பர்ஸ்ட் சிங்கிள்!

God Mode Song: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடந்த 2025 தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், இதுவரை யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Karuppu: இது God-uh Mode-uh.. யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை தாண்டிய சூர்யாவின் கருப்பு பட பர்ஸ்ட் சிங்கிள்!

கருப்பு பட பர்ஸ்ட் சிங்கிள்

Published: 

12 Nov 2025 18:50 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இப்படம் கடந்த 2025 மே மாதத்தில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யா45 (Suriya45) என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் சூர்யா அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துவருகிறார். இந்த ஜோடியானது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மதத்தின் பூஜைகளுடன் தொடங்கியிருந்த நிலையில், சூர்யா இப்படத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஷூட்டிங்கில் இணைந்திருந்தார்.

இப்படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட நிலையில், சாய் அபயங்கரின் (Sai Abhyankkar) இசையமைப்பில் “God Mod”e என்ற பாடல், கடந்த 2025 அக்டோபர் 20ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இப்படலானது வெளியாகி கிட்டத்தட்ட 4 வாரமான நிலையில் இதுவரை யூடியூப்பில் சுமார் 23 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இதையும் படிங்க: 14 வருடங்களுக்குப் பிறகு நான் செய்த விஷயம்.. என் அப்பா முதலில் பதற்றமானார் – துல்கர் சல்மான்!

யூடியூபில் 23 மில்லியனை கடந்த காட் மோட் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இறுதிக்கட்ட பணிகளை இருக்கும் கருப்பு திரைப்படம் :

சூர்யா மற்றும் திரிஷாவின் இந்த கருப்பு படத்தின் ஷூட்டிங் பணிகள் ஒரு 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவந்தது. மேலும் இன்னும் 10 சதவீதம் ஷூட்டிங் நடைக்கப்பெறாமல் இருந்த நிலையில், தற்போது சென்னையில் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் தொடர்பான ஷூட்டிங் நடைபெற்றுவருவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இந்த ஷூட்டிங்கில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் திரிஷா கிருஷ்ணன் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் – கொண்டாட்டத்தில் படக்குழு

மேலும் சூர்யாவின் சில கட்சிகளும் இன்னும் படமாக்கப்படாமல் உள்ள நிலையில், சூர்யா தொடர்பான காட்ச்சியும் இன்னும் நிறைவடையவில்லையாம். இந்த ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா விரைவில் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் தொடர்பான ஷூட்டிங்கும் முடிந்ததாக கூறப்படும் நிலையில், விரைவில் ஷூட்டிங் முடிவடையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் இப்படம் எப்போது வெளியாகிறது என்பது தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.