GVM: ‘அந்த படத்தை ஒரு யுனிவெர்ஸ் கதையாக்க நினைத்தேன்’ – கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!

Gautham Menon About His Universe Dream : கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், யுனிவெர்ஸாக அந்த படத்தை உருவாக்க நினைத்தது குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

GVM: அந்த படத்தை ஒரு யுனிவெர்ஸ் கதையாக்க நினைத்தேன் - கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!

கௌதம் வாசுதேவ் மேனன்

Updated On: 

08 Feb 2026 17:47 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் தற்போது சிறந்த நடிகராக அனைவரிடமும் பிரபலமாகிவருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon). இவர் சினிமாவில் படங்களில் நெகடிவ் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் 2023ம் ஆண்டில் வெளியான லியோ (Leo) படத்தில் தளபதி விஜயின் (Thalapathay Vijay) நண்பனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து புது புது படங்களில் நடித்தவருகிறார். தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் (Jana Nayagan) படத்திலும் இவர் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். அந்த விதத்தில் இயக்குநாராக கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் இயக்கத்தில் இன்னும் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படமானது வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்த நிலையில், சமீபத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தப்பட்டிருந்தது. அதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கௌதம் வாசுதேவ் மேனன், துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram) திரைப்படத்தை ஒரு யுனிவெர்ஸ் திரைப்படமாக உருவாக்க நினைத்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 42 வயதிலும் அசராது ஒர்க்கவுட் செய்யும் திரிஷா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு:

அண்ட் நேர்காணலில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “நான் கடந்த 2018ம் ஆண்டிலே துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஒரு யுனிவர்ஸ் கதைக்களத்தில் தயாரிக்க நினைத்தேன். ஆனால் இப்படத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே நீண்டகாலம் ஆகிவிட்டது. எங்களுக்கு அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நிதி தேவைப்பட்டது. அந்த சமயத்தில் லியோ படம் பயனுள்ளதாக இருந்தது. இப்போது எல்லாவற்றையும் முடித்துவிட்டோம்.

இதையும் படிங்க: வித் லவ் படத்தை பார்த்து ரொம்பவே ரசித்தேன் – பகவந்த் கேசரி பட இயக்குநர் பாராட்டு!

ஆனாலும் வெளியீட்டில் சில சட்ட சிக்கல்களையும் சந்திக்கிறோம். அந்த பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். இன்னும் ஒரு பிரச்னை மட்டுமே இருக்கிறது. அதுவும் சில நாட்களில் முடிந்துவிடும்” என துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேசிய பதிவு :

இந்த துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டிலே ரிலீசிற்கு தயாராகியிருந்தது. பின் நிதி பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த 2026ம் ஆண்டில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்