Kara Movie: கர படத்தின் இசைக்கு கிடைத்த வரவேற்பு.. நன்றி தெரிவித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு!
GV.Prakash Kumar X Post: தனுஷின் நடிப்பில் 54வது பயமாக இன்று (30/04/2026) வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கர. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. அதற்கு நன்றி தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் கர திரைப்படம்
தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவரின் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகவருகிறது. அந்த வகையில், இவரின் இசையில் இன்று 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகியுள்ள படம்தான் கர (Kara). இந்த திரைப்படத்தில் தனுஷ் (Dhanush) லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத சுவாரஸ்ய கதைக்களத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இவர் இயக்கியிருந்த போர் தொழில் படமானது சிறப்பாக வரவேற்கப்பட நிலையில், அடுத்ததாக இவர் இயக்கியிருக்கும் படம்தான் கர. இப்படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இப்படத்தின் கதை, நடிப்பு எவ்வாறு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இப்படத்திற்கு ஒரு தூணாக ஜி.வி.பிரகாஷின் இசை இருந்தது என்று கூறலாம். அந்த வகையில், இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து. அவர் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
கர படத்தின் இசை வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:
#kara is getting amazing reviews … thanks for the amazing response for the music and soundscape and BGScore … it’s a film oriented score which takes off in theatre with the visuals and film . And finally the day has come to witness the real magic of the score in theatres with…
— G.V.Prakash Kumar (@gvprakash) April 30, 2026
இந்த பதிவில் ஜி.வி. பிரகாஷ் குமார், “கர படமானது அற்புதமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இசை, ஒலி அமைப்பு மற்றும் பின்னணி இசைக்குக் கிடைத்த அற்புதமான வரவேற்புக்கு நன்றி. இது ஒரு திரைப்படத்தை மையமாகக் கொண்ட பின்னணி இசை, இது திரையரங்கில் காட்சிகளுடனும் படத்துடனும் இணைந்து ஜொலிக்கிறது. இறுதியாக, இந்த இசையின் உண்மையான மாயாஜாலத்தை திரையரங்குகளில் காட்சிகளுடன் காணும் நாள் வந்துவிட்டது. இசைக்கு கிடைத்த அற்புதமான வரவேற்புக்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
தனுஷின் கர படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புகள் இருந்துவருகிறது. இந்த படத்தின் வெளியீட்டின்போது தமிழில் வேறு எந்த படங்களும் வெளியாகாத நிலையில், சோலோவாக திரையரங்குகளில் வரவேற்கப்பட்டவருகிறது. மேலும் 2026 மே 1ம் தேதியில் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலிருந்து படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் நிச்சயமாக தனுஷின் கர படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.