தலைவன் தலைவி முதல் மாரீசன் வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன புது வரவு?
What To Whatch: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் என்னப் படம் வெளியாகிறது என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுவார்களோ அதே போல தான் ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் என்ன படம் வெளியாகிறது என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தலைவன் தலைவி, மாரீசன்
தலைவன் தலைவி: நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. ஃபேமிலி செண்டிமெண்ட் நகைச்சுவையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் செம்பன் வினோத், சரவணன், தீபா, ரோஷ்ணி ஹரிபிரியன், காளி வெங்கட், மைனா நந்தினி மற்றும் ஆர்.கே.சுரேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
தலைவன் தலைவி படத்தின் ட்ரெய்லர் இதோ:
பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குநர் சிவபிரகாஷ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்தப் படத்தில் நடிகர் விஜித் பச்சன் நாயகனாக நடிக்க நடிகை ஷாலி கே நிவேகாஸ் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மைம் கோபி, என்பிகேஎஸ் லோகு, அருள் தாஸ், சுபத்ரா ராபர்ட், விஜய் டிவி தீபா, சாய் வினோத் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்ததுடன் இந்தப் படத்திற்கு பாடல்களையும் எழுதி இருந்தார். இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் ட்ரெய்லர் இதோ:
சூத்ரவக்யம்: நடிகர் ஷைன் டாம் சாக்கோ நாயகனாக நடித்து மலையாள சினிமாவில் வெளியான படம் சூத்ரவக்யம். ஃபேமிலி நகைச்சுவை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் யூஜியன் ஜோஸ் சிராம்மெல் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ உடன் இணைந்து நடிகர்கள் வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா, பினோஜ் வில்லியா, மீனாட்சி மாதவி, நஜீஃப், அனகா, திவ்யா எம் நாயர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
சூத்ரவக்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
மாரீசன்: நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாரீசன். இயக்குநர் சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருந்த நிலையில் கதையை எழுத்தாளர் வி. கிருஷ்ண மூர்த்தி எழுதி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.