மாஸ்க் முதல் மிடில் க்ளாஸ் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படத்தின் லிஸ்ட்!
This week theatre release: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாரம் வாரம் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சின்ன பட்ஜெட் படம் பெரிய பட்ஜெட் படம் என்று எந்த வித்யாசமும் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

படங்கள்
மாஸ்க்: நடிகர் கவின் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மாஸ்க். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா வில்லி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன் மற்றும் விஜே அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விகர்ணன் அசோக் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மாஸ்க் படத்தின் ட்ரெய்லர் இதோ:
யெல்லோ: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது வந்தவர் நடிகை பூர்ணிமா. தொடர்ந்து ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தில் அறிமுகம் ஆன இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ள யெல்லோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கி உள்ள நிலையில் படம் நாளை 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
யெல்லோ படத்தின் ட்ரெய்லர் இதோ:
தீயவர் குலை நடுங்க: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தீயவர் குலை நடுங்க. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தினேஷ் லக்ஷ்மனன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் நாளை 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தீயவர் குலை நடுங்க படத்தின் ட்ரெய்லர் இதோ:
மிடில் க்ளாஸ்: இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கி உள்ள படம் மிடில் க்ளாஸ். மிடில் க்ளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை விஜய்லட்சுமி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே கவனத்தை ஈர்த்து இருந்த நிலையில் படம் நாளை 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.