தென்னிந்திய சினிமாவில் நாளை ஜனவரி 23 வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theatre Release Movies List: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் தொடர்ந்து வாரம் வாரம் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறித்து பார்ப்போம்.

தென்னிந்திய சினிமாவில் நாளை ஜனவரி 23 வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

22 Jan 2026 19:56 PM

 IST

ஹாட் ஸ்பாட் 2 மச்: தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படமாக உருவாகி உள்ளது ஹாட் ஸ்பாட் 2 மச். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா, சஞ்சனா திவாரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான KJB டாக்கீஸ், யானைகளுக்கு எறும்புகள், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.ஜே.பாலமணிமார்பன், அனீல் கே. ரெட்டி, விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பேபி கேர்ள்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இயக்குநர் அருண் வர்மா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் லிஜோமோல், அபிமன்யு திலகன் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மலையாள சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

திரௌபதி 2: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரக்ஷனா இந்துசூடன், சிராக் ஜானி மற்றும் நட்டி நடராஜ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு

திரௌபதி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..