ரேவதினு கூப்பிடா திரும்பி கூட பாக்க மாட்டேன்… எனக்கு அந்த பேரே பிடிக்காது – நடிகை ஓபன் டாக்
Actress Revathi: 80களில் நடிகையாக அறிமுகம் ஆனதில் இருந்து தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரேவதி. இவரது உண்மையான பெயர் இது இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். இந்த நிலையில் படத்திற்காக ரேவதி என்ற பெயர் வைக்கப்பட்டது அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரேவதி
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நாயகியாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ரேவதி. (Actress Revathy) இவர் கடந்த 1983-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான மண் வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ரேவதி. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பல நூறு படங்களில் நடித்துள்ளார். பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த இவர் அப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, ஆண் பாவம், மௌன ராகம், புன்னகை மன்னன், உத்தம புருஷன், அஞ்சலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து நாயகியாகப் பலப் படங்களில் நடித்து வந்த நடிகை ரேவதி தற்போது படங்களில் அக்கா, அம்மா மற்றும் பல சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் உடன் ரேவதி இணைந்து நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் நடிகை ரேவதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஆஷா தான் என் பெயர்… ரேவதி எனக்கு பிடிக்கல:
இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேவதி சினிமாவில் தனக்கு ரேவதி என்று பெயர் வைத்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் எனது அப்பா அம்மா எனக்கு வைத்த பெயர் ஆஷா என்னை அப்படிதான் கூப்பிடனும் என்று நான் அப்போ சண்டைப் போட்டேன்.
ஆனா ஆஷான்ற பெயர்ல நடிகைகள் இருக்காங்க அதனால மாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. அப்பறம் கொஞ்ச நாளுக்கு என்ன ரேவதி கூப்டா கூட நான் திரும்பிப் பார்க்க மாட்டேன். கொஞ்ச நாள் பிறகு எனக்கு அந்த பேர் பழகிடுச்சு. அப்பறம் ஃபேமிலி அப்பறம் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஆஷானும் படத்திலை ரேவதினும் கூப்டுவாங்க என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
ரேவதியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!