Fahadh Faasil: ‘இதயம் முரளி’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில் – படக்குழு வெளியிட்ட வீடியோ!

Fahadh Faasil Joind Idhyam Murali Movie: அதர்வா மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் இதயம் முரளி. இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், தற்போது இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவிப்பு.

Fahadh Faasil: இதயம் முரளி படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில் - படக்குழு வெளியிட்ட வீடியோ!

அதர்வா மற்றும் ஃபகத் ஃபாசில்

Updated On: 

12 Feb 2026 13:17 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகனாக படங்களில் நடித்து கலக்கிவருபவர் அதர்வா (Athrvaa). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு தம்பி வேடத்தில் அதர்வா நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் எனர்ஜியாக இருந்தது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்தாக தொடர்ந்து, புது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், அறிமுக இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran) இயக்கத்தில் அதர்வா புது படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali).

இந்த படத்தில் அதர்வாவுடன் நடிகைகள் கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படதின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது இப்படத்தில் சிறப்பு வேடத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரவி மோகன் வந்தபிறகு என் வாழ்க்கையே மாறியது – பாடகி கெனிஷா எமோஷனல் பதிவு!

ஃபகத் ஃபாசில் இணைந்தது குறித்து இதயம் முரளி படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :

இதயம் முரளி திரைப்படத்தின் ரிலீஸ் :

இந்த இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா, ஏஞ்சலின், டிராவிட் செல்வம், ஜோனிடா காந்தி மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தய் ஆக்ஷன் பாஸ்கரன் இயக்க, அவரின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை த்யாரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மை லார்ட் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது 2D என்டர்டெயின்மென்ட்!

இந்நிலையில் தற்போது இப்பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த இதயம் முரளி படத்தில் தற்போது சிறப்பு வேடத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை 2026ம் ஆண்டு கோடைக்காலத்தை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுவரும் நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை. இந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், இப்படம் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்