Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: வசூலை வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி படம்!

Entertainment News in Tamil, 28 July 2025, Live Updates: தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி - நித்யா மெனன் கூட்டணியில் உருவான படம் தலைவன் தலைவி. இப்படம் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியானது.

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 Jul 2025 13:57 PM
Share
Entertainment News Live Updates: வசூலை வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி படம்!
சினிமா செய்திகள்

LIVE NEWS & UPDATES

  • 28 Jul 2025 02:00 PM (IST)

    ரூ.25 கோடி வசுலித்த தலைவன் தலைவி படம்.. வெளியான அறிவிப்பு

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்  பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைவன் தலைவி. இப்படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • 28 Jul 2025 01:40 PM (IST)

    ஹவுஸ்மேட்ஸ் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது: இயக்குநர் ராஜவேல்

    இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் பேசிய ராஜவேல், முதல் படம் எடுப்பது எப்போதும் கஷ்டம். அதைவிட சவாலானது வெளியிடுவது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 01:18 PM (IST)

    காப்புரிமை வழக்கு.. இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி

    சோனி நிறுவனத்தின் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காப்புரிமை தொடர்பாக இந்த வழக்கு போடப்பட்டிருந்தது.

  • 28 Jul 2025 12:45 PM (IST)

    இந்த வாரம் வெளியாகும் இளம் நடிகர்களின் படங்கள்

    தமிழ் சினிமாவில் 2025, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹவுஸ்மேட்ஸ், சரண்டர், போகி என வளரும் இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நிலையில் எந்த படம் மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 28 Jul 2025 12:20 PM (IST)

    வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி டிக்கெட் முன்பதிவு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு டிக்கெட் விற்பனை வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 28 Jul 2025 12:00 PM (IST)

    ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லோஹா படத்தின் டீசர்

    துல்கர் சல்மான் தயாரிப்பில் நஸ்லன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லோஹா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Jul 2025 11:41 AM (IST)

    காந்தா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

    துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் காந்தா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரித்து வரும் நிலையில் செல்வணி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

  • 28 Jul 2025 11:20 AM (IST)

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன்.. ப்ரோமோ ஷூட் பணிகள் நிறைவு

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் படத்திற்கான ப்ரோமோ ஷூட் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதில் அதிகமான விஎஃப்எக்ஸ் பணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 28 Jul 2025 11:00 AM (IST)

    நடனமாட பயந்த சௌபின் சாஹிர்.. சாண்டி சொன்ன சுவாரஸ்ய தகவல்

    ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடலில் நடனமாட பிரபல மலையாள நடிகரான சௌபின் சாஹிர் பயந்ததாக நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார். நான் இதுவரை இல்லாமல் முதல்முறையாக இவ்வளவு பெரிய குரூப்புடன் நடனமாடுகிறேன் என கூறியதாகவும் சாண்டி பகிர்ந்துள்ளார்.

  • 28 Jul 2025 10:40 AM (IST)

    கமலுடன் சினிமா பற்றி எதுவும் பேசமாட்டேன்.. நடிகர் ஃபஹத் ஃபாசில்

    நானும் கமல்ஹாசனும் சேர்த்தால் கிட்டதட்ட 3 மணி நேரம் நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம். அதில் சினிமா பற்றி எதுவும் இருக்காது. கிட்டதட்ட எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி தான் பேச்சு இருக்கும் என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 10:20 AM (IST)

    பிரபல கன்னட நடிகர் பிரதமிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல்

    கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக திகழும் பிரதமிடம், நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் என கூறி ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

  • 28 Jul 2025 10:00 AM (IST)

    விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸ்.. படக்குழு திருப்பதியில் சாமி தரிசனம்

    கௌதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கிங்டம். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வருகை தந்த பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

  • 28 Jul 2025 09:40 AM (IST)

    துல்கர் சல்மான் பிறந்தநாள்.. காந்தா படத்தின் டீசர் இன்று வெளியீடு

    நடிகர் மம்மூட்டியின் மகனும், தென்னிந்தியாவின் இளம் நடிகருமான துல்கர் சல்மான், இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Jul 2025 09:20 AM (IST)

    ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய 11 பேர்.. நடிகை திவ்யா ஸ்பந்தனா வெளியிட்ட பதிவு

    நடிகையும் , பிரபல அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தனக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய 11 பேரின் பெயரை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர்கள் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் என சொல்லப்படுகிறது.

  • 28 Jul 2025 09:00 AM (IST)

    மதராஸி படம் கண்டிப்பாக கம்பேக்காக அமையும்: ஏ.ஆர்.முருகதாஸ்

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்டவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றி கிடைக்காமல் தவித்து வருகிறார். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கியுள்ள மதராஸி படம் கண்டிப்பாக கம்பேக்காக அமையும் என ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 08:40 AM (IST)

    நல்ல வரவேற்பை பெற்ற சட்டமும் நீதியும்.. நெகிழ்ச்சியடைந்த சரவணன்

    ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியான வெப் தொடர் சட்டமும் நீதியும். பாலாஜி செல்வராஜ் இயக்கிய இந்த வெப் தொடரில் முதன்மை கேரக்டரில் சரவணன் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் சட்டமும் நீதியும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் சரவணன் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 08:20 AM (IST)

    சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய் சேதுபதி.. ஷாக்கான ரசிகர்கள்

    பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சென்னை கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தனர்.

  • 28 Jul 2025 08:02 AM (IST)

    HBD Dhanush: நடிகர் தனுஷ் பிறந்தநாள்.. களைகட்டிய சமூக வலைத்தளங்கள்

    தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் வாழ்த்து மழையால் களைகட்ட தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பல்துறை திறமை வாய்ந்தவராகவும் திகழும் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடைய தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தின் அப்டேட் நேற்று வெளியானது. இன்று அவரின் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 10 கிலோ எடை குறைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் தொடர்பு கதையாக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி மற்றும் வடிவேலு பகத் பாஸில் நடித்த மாரீசன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வார விடுமுறையில் நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் வியக்க வைக்கும் கதாநாயகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடித்துள்ள காந்தா படத்தின் டீசர் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On - Jul 28,2025 8:02 AM