Entertainment News Live Updates: விரைவில் இணையும் தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணி!
Entertainment News in Tamil, 22 July 2025, Live Updates: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

LIVE NEWS & UPDATES
-
Housemates: ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்து வரும் ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடலான “அக்கலு பக்கலு” இன்று (ஜூலை 22) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.
-
ஓடிடி தளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சட்டமும் நீதியும்!
ஜீ5 ஓடிடி தளத்தில் நடிகர் சரவணன் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியானது. இப்படியான நிலையில் இதுவரை 51 மில்லியன் பார்வைகளை இந்த வெப் தொடர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குடும்பஸ்தன் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர்தானா?
மணிகண்டன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த குடும்பஸ்தன் படத்தில் முதலில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் தேதி இல்லாததால் தன்னை பரிந்துரை செய்ததாக மணிகண்டன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-
HBD YogiBabu: நடிகர் யோகிபாபு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகிபாபு இன்று (ஜூலை 22) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் ஆண்டனியின் மார்கன் படம்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
லியோ ஜான்பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த மார்கன் படம் வரும் ஜூலை 25ம் தேதி டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. இந்த படம் ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
-
Shilpa Shirodkar: நான் 10ம் வகுப்பு பெயில்.. மனம் திறந்த நடிகை ஷில்பா ஷிரோத்கர்
இந்தி திரையுலகில் சில படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ஷில்பா ஷிரோத்கர் திருமண வாழ்க்கையால் சினிமாவில் இருந்து விலகினார். மேலும் ஒரு நேர்காணலில் தான் 10ம் வகுப்பு பெயில் என்பதையும், தனது கணவர் எம்பிஏ டபுள் டிகிரி முடித்தவர் எனவும் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.
-
தனுஷூடன் இணையும் ஹெச்.வினோத்.. உறுதி செய்த சாம்.சி.எஸ்
இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை வைத்து ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிகர் தனுஷூடன் ஒரு படம் இணையவுள்ளதாகவும், அதற்கு தான் இசையமைப்பதாகவும் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
Avatar 3: அவதார் படத்தின் அடுத்த பாகம்.. புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்ற அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார்: பயர் அண்ட் ஆஷ் வரும் 2025, டிசம்பர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
Rashmika Mandanna: தொழில்துறையில் அடியெடுத்து வைக்கும் ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கிரஷ் எனப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவை தொடர்ந்து தொழில்துறையில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த தொழிலில் முதலீடு செய்யப்போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Raashii Khanna: பவன் கல்யாண் படத்தில் நடிகை ராஷி கண்ணா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ராஷி கண்ணா சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். இப்படியான நிலையில் அவர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
-
ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி
வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டாண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் ஷூட்டிங் நடக்கும்போதே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு பலரும் உதவி செய்து வரும் நிலையில், வேட்டுவம் இயக்குநர் ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார்
-
மோசமான செயல் – அம்பிகாபதி இயக்குநர் வருத்தம்
இது குறித்து பேசியுள்ள இயக்குநர், இது மிகவும் மோசமான செயல். எனது படைப்பு சுத்திரம் பறிக்கப்பட்டது போல உணர்கிறேன். ரசிகர்களால் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ஏற்றுக்கொண்டு அவர்கள் கொண்டாடி வரும் கிளைமேக்ஸ் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இது படத்தை மட்டுமல்ல ரசிகர்களின் ரசனையைும் கேள்விக்குறியாக்குகிறது என்றார்
-
அம்பிகாபதி ஏஐ மாற்றம் – கொதிக்கும் இயக்குநர்
அம்பிகாபதி திரைப்படம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏஐ உதவியுடன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் மாற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
-
ஓவர் கூட்டம் வரலாம் – இடத்தை மாற்றும் அனிருத்
டிக்கெட்டுக்கு அதிகம் டிமாண்ட் இருப்பதாலும், அப்படியானால், நினைத்ததை விட கூட்டம் அதிகம் வரும் என்பதால், இன்னும் பெரிய இடத்தில் concert நடத்த இடம் மாற்றப்படுவதாக அனிருத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Anirudh Concert : அனிருத் கான்செர்ட் தள்ளி வைப்பு
படத்துக்கு இசை அமைப்பது மட்டுமின்றி அனிருத்தின் Concert நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஜூலை 26 நடக்க இருந்த Concert தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது
-
Coolie Movie : கூலி படம் செய்யப்போகும் சாதனை?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து கோலிவுட்டின் பார்வை கூலி படம் மீது விழுந்துள்ளது
-
Indian 3 Movie : டிசம்பரில் ரிலிசாகிறதா இந்தியன் 3?
கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 வெளியாகுமா எனக் கூறப்பட்டது. ஆனால் வரும் டிசம்பர் மாதம் இந்தியன் 3 வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது
-
Suriya Movie Update : கருப்பு பட டீசர் விவரம்
நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை ஜூலை 23ம் தேதி கொண்டாட உள்ளார். இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் (Actor Suriya) பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது நாளை. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. அவர் நடிப்பில் ரிலீசாகவுள்ள படத்தின் அப்டேட்களும் வர காத்திருக்கின்றன. சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் இந்த கருப்பு படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருகின்றன வீக் எண்டை கொண்டாடும் விதமாக கோலிவுட்டில் 2 படங்கள் எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸாகவுள்ளன. வடிவேலு, (Vadivelu) பகத் நடித்துள்ள மாரீசன் மற்றொன்று விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடித்துள்ள தலைவன் தலைவி. இந்த 2 படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இரண்டுமே ட்ராமா மாதிரியான ஜார்னர் என்பதால் இரண்டுமே ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது.
உலக நாடுகளிலும் தங்களது திறமையை கோலிவுட் நடிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.
Published On - Jul 22,2025 8:02 AM