எங்க அண்ணனுக்கு நாங்க தான் செய்வோம்… தளபதி விஜய்க்காக மலேசியாவில் ஒன்றுகூடிய தமிழ் சினிமா பிரபலங்கள்!
Jana Nayagan Movie Audio Launch: தமிழ் சினிமாவில் முன்னணி இயகுநர்களாக வலம் வருபவர்கள் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் மற்றும் அட்லி குமார். இவர்கள் அனைவரும் தற்போது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டிற்காக மலேசியா சென்றுள்ளனர்.

இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநர்களாக வலம் வருபவர்கள் இயக்குநர்கள் நெல்சன் திலீப் குமார், அட்லி குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ். இவர்களது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர்கள் மூன்று பேரும் நடிகர் தளபதி விஜயின் படங்களை இயக்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவர்கள் இயக்கத்தில் இதுவரை நடிகர் விஜய் நடித்தப் படங்கள் என்ன என்றால், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தெறி, பிகில் மற்றும் மெர்சல் என அடுத்தடுத்து மூன்று படங்களை நடிகர் விஜயை வைத்து இயக்கினார். இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு படங்களில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பாடல்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய்க்காக மலேசியாவில் ஒன்றுகூடிய தமிழ் சினிமா பிரபலங்கள்:
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இந்த ஜன நாயகன் படம் தான் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகி இறுதிப் படம் என்பதால் இந்த இசை வெளியீட்டு விழா அவருக்கு பிரிவு உபச்சாரா விழாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணாகவே பிரபலங்கள் அங்கு செல்கிறனர்.
Also Read… கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
மலேசியாவிற்கு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:
.@Dir_Lokesh on his way to Malaysia for Thalapathy Katcheri @actorvijay 🔥🔥
pic.twitter.com/z4AFcQvNUi— Lets OTT x CINEMA (@LetsOTTxCinema) December 26, 2025
மலேசியாவிற்கு சென்ற இயக்குநர் அட்லி:
.@Atlee_dir off to Malaysia for his brother, for his dear Annan #ThalapathyVijay ‘s grand #JanaNayagan audio launch 🔥🔥❤️. pic.twitter.com/OCyuYv8orD
— Rajasekar (@sekartweets) December 26, 2025
Also Read… தணிக்கைகுழுவின் அறிவுறுத்தல்… பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படக்குழு