Venkat Prabhu: ‘பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது’ – அஜித் குமாரின் ரேஸ் அனுபவத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு!
Venkat Prabhu About Ajiths Racing: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் அஜித் மங்காத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் அஜித் குமாரின் கார் ரேஸை வெங்கட் பிரபு நேரில் பார்த்த நிலையில், அது குறித்த நெகிழ்ச்சி அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

வெங்கட் பிரபு - அஜித்
இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து, தி கோட் (The GOAT) என்ற திரைப்படத்தை இறுதியாக இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்திருந்தது. இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயனுடன் புது படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, துபாய் அபுதாபியில் நடிகர் அஜித் குமாரை (Ajith Kumar) நேரில் சந்தித்திருந்தார். அஜித் குமார் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கும் நிலையில், அவரை சமீபகாலமாக பல்வேறு பிரபலங்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அஜித் குமாரை நேரில் சந்தித்திருந்தார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்தது மற்றும் அவரின் ரேஸ் பயிற்சிகள் குறித்த அனுபவம் பற்றி வெங்கட் பிரபு வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 7 கோடி மக்கள் பார்க்கும் படத்தை 5 பேர் எப்படி முடிவு செய்யலாம் – சென்சார் போர் குறித்து விஷால் சொன்ன கருத்து
அஜித் குமாரின் ரேஸ் குறித்து வெங்கட் பிரபு பகிர்ந்து அனுபவம் :
அந்த வீடியோவில் பேசிய வெங்கட் பிரபு, “அஜித் குமார் சார் துபாய் அபுதாபியில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். அதில் அஜித் குமாரின் ரேஸை நேரில் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது. முதல் முறையாக நமக்கு தெரிந்தவர் ரரேஸ் ஓட்டுறாரு என தெரியும்போது ஆர்வமும் அதிகமாக இருந்தது, அதுபோல பயமும் அதிகமாக இருந்தது. மேலும் அஜித்தின் ரேஸ் அணி எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை பார்க்கமுடிந்தது. அவரின் ரேஸ் தளத்தில் எப்போதும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும். சினிமா என்பதும் கஷ்டம்தான். அதில் ஒரு தவறு செய்தால், ரீடேக் எடுப்போம் ஆனால் அங்கு அப்படியெல்லாம் கிடையாது. ரேஸில் வாழ்வா?, சாவா என்பதுபோன்ற விஷயமே நடிக்கிறது.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்காக எழுதியதா? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
மேலும் அஜித் சாரே என்னிடம் சொன்னாரு, “இந்த கார் ரேஸ் விளையாட்டு மிகவும் அருமையான விளையாட்டு. இதை இந்தியாவிலும் கொண்டுவரவேண்டும். அதற்கான விழிப்புணர்வையும் கொடுக்கணும்” என அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும் ரேஸ் முடிந்தவுடன் தனது கார் முன்னே நின்று, ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது வழக்கமே. அன்று போட்டோ எடுப்பதற்கு பல ரசிகர்கள் குவிந்துவிட்டார்கள் இதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. தல ரசிகர்கள் மற்ற ரேஸர்களின் காரில் சாய்ந்து அதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு காரும் பல கோடி இருக்கும். மற்ற கார் ரேஸர்கள் இதை அஜித் சாரிடம் சொல்லியது பயங்கர சங்கடமாக இருந்தது” என ஆஜித் குமாருடன் ரேஸிங் தளத்தில் கிடைத்த அனுபவம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
அஜித் குமாரின் ரேஸிங் பற்றி வெங்கட் பிரபு பேசியது குறித்த பதிவு:
Director @vp_offl on @Akracingoffl 🏎️🏁 #ajith #ajithkumarracing #venkatprabhu #ajithkumar pic.twitter.com/OpeQTAOKwN
— Done Channel (@DoneChannel1) February 22, 2026
நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் பயிற்சியானது ஒரு ஆவணப்படமாக தயாராகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படமானது கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட திட்டமிடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.