அல்லூ அர்ஜூன் படம் எப்படி இருக்கும்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
Lokesh Kanakagaraj about his next movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்தியா அளவில் பிரபலமாக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கூலி படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் இந்தப் படத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புது அவதாரத்தை எடுத்தார். அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக டிசி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.
அல்லு அர்ஜூன் படம் எப்படி இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்:
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசியபோது அவரிடம் ட்ரீம் ப்ராஜெக்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப் படம் அப்படி இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் அந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக அல்லு அர்ஜூன் படம் தான் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேட்டியும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஓர் ஆண்டை நிறைவு செய்தது குடும்பஸ்தன் படம்… நாயகி வெளியிட்ட உணர்வுபூர்வமான பதிவு
இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
Interviewer : If you could make your dream project anonymously, without audience expectations, what kind of project would you do ?#LokeshKanagaraj :- My Next Movie (#AA23) is also like that Only.💥 😎💥@Dir_Lokesh 🌋🌋🌋@alluarjun 💥💥💥💥@anirudhofficial 🌋🌋🌋 pic.twitter.com/qKimkokEtR
— sunny (@Bhanu90590) January 24, 2026
Also Read… கில்லி ரீ-ரிலீஸ் சாதனையை முறியடித்தா மங்காத்தா? இணையத்தில் வைரலாகும் தகவல்!