Dude Movie: டியூட் கதையை அவரை நினைத்துதான் எழுதினேன்.. படத்தின் கதை இதுதான் – கீர்த்தீஸ்வரன்!

Keerthiswaran About Dude Movie: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை ரசிகர்களை வைத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் டியூட். இந்த படத்தின் கதைக்களம் மற்றும் யாரை நினைத்து எழுதியது பற்றி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறியுள்ளார்.

Dude Movie: டியூட் கதையை அவரை நினைத்துதான் எழுதினேன்.. படத்தின் கதை இதுதான் - கீர்த்தீஸ்வரன்!

கீர்த்தீஸ்வரன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் சாய் அபயங்கர்

Published: 

05 Oct 2025 16:53 PM

 IST

கோலிவுட் சினிமாவில் சூர்யாவின் (Suriya) சூரரைப்போற்று (Soorarai Pottru) என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கீர்த்தீஸ்வரன் (keerthiswaran). இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் டியூட் (Dude). நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் இந்த படமானது தயாராகிவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், இந்த 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய டியூட் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இப்படத்தின் கதை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : AK64 அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

டியூட் திரைப்படம் பற்றி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேச்சு :

சமீபத்தில் டியூட் படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தீஸ்வரன் அதில், “இந்த டியூட் படத்தின் கத்தியை நான் எழுத் தொடங்கும்போது, ரஜினி சாருக்கு 30 வயது இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, கற்பனையாக இந்த படத்தின் கதையை எழுத தொடங்கினேன். இதை நான் எழுதும்போது எனது மனதில் வந்த யோசனையும் அதுதான். மேலும் இந்த இந்த படத்தின் கதைக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் சரியாக பொருந்தினார். மேலும் இந்த கதையை அவருடன் எடுத்துச்செல்லும்போது, அவருக்கு பிடித்திருந்தது.

இதையும் படிங்க: 80ஸ் – 90ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியன்.. சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்!

அவரும் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் மைய கரு என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இருவரும், ஒரு ஈவென்ட் மேனேஜ்மேண்ட் கம்பெனியை நடத்துகிறார்கள் அதை வைத்துதான் முழு கதையும் நகர்கிறது. மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் ஜோடி, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஜோடியை போலவே இருந்தது. மேலும் இந்த டியூட் படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னையில்தான் நடந்தது” என்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டியூட் படத்தின் 3வது பாடல் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு :

இப்படி மாறுபட்ட கதைகளை நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த டியூட் படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.