With Love Movie: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் ‘வித் லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
Atlee Unveils With Love Movie Trailer: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது கதநாயகனாக அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள படம்தான் வித் லவ். இந்த படமானது வித்தியாசமான காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இதன் ட்ரெய்லரை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

வித் லவ் படத்தின் ட்ரெய்லர்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். இயக்குநராக அறிமுகமான இவரின் முதல் படமே கோலிவுட் முழுவதும் பாராட்டப்பட்டிருந்தது. அந்த வகையில் இயக்குநரான இவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் வித் லவ் (With Love). இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் வெறும் 45 நாட்களில் முழுமையாகவே முடிந்தது. இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார்.
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 30ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் அட்லீ (Atlee) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எனது வாழ்க்கையிலே ஒரே நாளில் ஓகே சொன்ன படம் இதுதான்- அனஸ்வரா ராஜன் பேச்சு!
வித் லவ் படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
#WithLove – Official Trailer..⭐ Oozing with a lot of energy from the lead pair and the concept..🤝 Might cater well to the young audience this love season..✌️
Link: https://t.co/PGY3eMfZDw pic.twitter.com/iaGjNxckPX
— Laxmi Kanth (@iammoviebuff007) January 30, 2026
இந்த வித் லவ் திரைப்படமானது ஒரு வித்தியாசமான ஃபீல் குட் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படமானது முதல் காதல் குறித்து பேசப்படும் ஒரு கதை. இதன் ட்ரெய்லரில் அபிஷன் மற்றும் அனஸ்வராவின் ஜோடி சரியாக பொருந்தியுள்ளது. மேலும் அபிஷனின் நடிப்பை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட பிரதீப் ரங்கநாதனின் நடிப்பை பார்ப்பதுபோலவே உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் ‘காந்தி டால்க்ஸ்’ சைலன்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மேலும் டூரிஸ்ட் பேமிலி படத்தை போலவே இப்படமும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வித் லவ் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது துவக்கம் :
இந்த வித் லவ் படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் மீதான ஏதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து பாடல்களும் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி 2ம் தேதி அல்லது 3ம் தேதியில் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.