சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி – இயக்குநர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

Director AL Vijay talks about Actress Sara Arjun: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை சாரா அர்ஜுன் தனக்கு மகள் மாதிரி என்று தெரிவித்து உள்ளார்.

சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி - இயக்குநர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

சாரா அர்ஜுன் - இயக்குநர் ஏ.எல்.விஜய்

Published: 

05 Mar 2026 10:44 AM

 IST

பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவரது இயக்கத்தில் வெளியகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அப்படி பிரபல இயக்குந்ராக வலம் வரும் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் இயக்குநர் ஏ.எ.விஜய். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நாயகனாகவும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகனாகவும் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குநராக அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான அனைத்தும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதில் குறிப்பாக மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் ஆகியம் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் தெய்வ திருமகள் படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடிகை சாரா அர்ஜுன் நடித்து இருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்திலேயே சைவம் படத்திலும் சாரா அர்ஜுன் நடித்து இருந்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது நாயகியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் சாரா அர்ஜுன் குறித்து சமீபத்தில் ஏ.எல்.விஜய் பேசியது வைரலாகி வருகின்றது.

சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி:

சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி, ஏனென்றால் அவள் தன் பெற்றோருடன் இருப்பதை விட என்னுடன் அதிக நேரம் செலவிடுகிறாள். ஒவ்வொரு தேர்வு இடைவேளையிலும், அவள் என் வீட்டிற்கு வருகிறாள். சாரா அர்ஜுனைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், என் மகள் ஒரு பெரிய நட்சத்திரமாகிவிட்டாள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை பேசுகிறோம். அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தை. துரந்தர் குழுவுடன் நான் பேசும்போது, ​​அவர்கள் அவளைப் பற்றி பேசும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று ஏ.எல்.விஜய் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ராம் சரணின் ராய் ராய் ரா ரா பாடலைப் பாராட்டிய சிரஞ்சீவி – வைரலாகும் போஸ்ட்!

இணையத்தில் வைரலாகும் ஏ.எல்.விஜய் பேச்சு:

Also Read… தலைவா அரசியல் படம் இல்லை – இயக்குநர் ஏ எல் விஜய்!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..