சூரியா 45 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Suriya 45 Movie: சூர்யாவின் நடிப்பில் தற்போது அவரது 45-வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருவதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூரியா 45 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யா

Published: 

19 Jun 2025 12:52 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தற்போது படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநரும் நடிகருமானா ஆர்.ஜே.பாலாஜி (R.J.Balaji) உடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே இந்தப் படத்தில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு முழு நேரமாக சூர்யா 45 படத்தில் கவனம் செலுத்தியுள்ளார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து தவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 45 டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது?

நடிகர் சூர்யா நடிப்பில் விறுவிறுபாக உருவாகி வரும் படம் சூர்யா 45. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக படத்தின் இசையமைப்பாளர் சாய் அபாயங்கர் சமீபத்தில் அப்டேட் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் முன்னதாக நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் அன்று படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரைப் படக்குழு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி நாளை ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் டைட்டில் டீசர் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 45 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46:

சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் முன்பே அவரது 46-வது படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அதன்படி இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ சூர்யாவின் நாயகியாக நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

Related Stories
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்
ஜன நாயகன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்தது இதுதான் – நடிகர் டீஜே சொன்ன விசயம்