Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி… சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.  இந்தப் படம் ரசிகரக்ளிடையேயும் பிரபலங்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனைப் படைத்து வருவதால் சசிகுமார் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி… சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?
டூரிஸ்ட் ஃபேமிலிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 17:10 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார் (Actor Sasikumar). தொடர்ந்து வித்யாசமான கதைகளில் நடித்து தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வரும் நடிகர் சசிகுமார் சமீபத்தில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக தென்னிந்திய ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் நடிகையான சிம்ரன் நடித்திருந்தார். இந்த ஜோடியை ரசிகர்கள் படத்தில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கமலேஷ், மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என பலர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படம் 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியானதில் இருந்தே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களும், விமர்சகர்களும் படம் நிச்சயம் கோலிவுட் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழ் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் படம் காண வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த நிலையில் படம் வெளியானபோது ரசிகர்களுக்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்துவிட்டது. படம் பார்த்த ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ஃபீல் குட் படம் பார்த்த அனுபவம் உள்ளது என்று விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைப்பெற்றது.

நடிகர் சசிகுமாரின் எக்ஸ் தள பதிவு:

இந்த விழாவில் இயக்குநர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் படம் வெற்றியடைந்தது குறித்து மனம் நெகிழ்ந்து பேசினர். பின்னர் நடிகர் சசிகுமார் பேசியபோது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்திருப்பதையும் படத்தில் நடிகை சிம்ரனுடன் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சசிகுமாரிடம் டூரிஸ்ட் ஃபேமிலி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் நீங்கள் உங்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் பரவுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் சசிகுமார் சிரித்துக்கொண்டே நான் சம்பளத்தை எல்லாம் உயர்த்தவில்லை அதே சம்பளம் தான் என்று கூறியுள்ளார்.

தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா...
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?...
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?...
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!...
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!...
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?...
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!...
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்......
கவினின் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!
கவினின் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!...