Bison: சின்மயின் குரலில்… துருவ் விக்ரமின் பைசன் படத்திலிருந்து வெளியான ‘சீனிக்கல்லு’ பாடல்!

Bison Movie Third Single: தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் துருவ் விக்ரம். இவரின் நடிப்பில் கபடி கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் பைசன். இந்த படத்திலிருந்து 3வது பாடலை, துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

Bison: சின்மயின் குரலில்... துருவ் விக்ரமின் பைசன் படத்திலிருந்து வெளியான சீனிக்கல்லு பாடல்!

சீனிக்கல்லு பாடல்

Published: 

23 Sep 2025 21:04 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மாரி செல்வராஜ் (Mariselvaraj). இவரின் இயக்கத்தில் இறுதியாக “வாழை” (Vazhai ) என்ற படமானது வெளியாகி  வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக இவரின் இயக்கத்தில் கபடி கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் பைசன் (காலமாடான்) (Bison) . இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் (Dhruv Vikram) ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் 4வது படமாகும். ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து மகான் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்தாக, இவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பைசன். இன்று 2025 செப்டம்பர் 23 ஆம் தேதியில், நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, பைசன் படக்குழு 3வது பாடலை வெளியிட்டுள்ளது. “சீனிக்கல்லு” (Cheenikkallu) என்ற லிரிகள் வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சினிமா என் இதயத்துடிப்பு.. தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால் பேச்சு!

பைசன் படக்குழு வெளியிட்ட மூன்றாவது பாடல் பதிவு

பைசன் படத்தின் சீனிக்கல்லு என்ற பாடலை பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார். இந்த பாடலின் வரிகளை இயக்குநர் மாரிசெல்வராஜ் எழுத, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் தற்போது வெளியாகியிருக்கும் இந்த சீனிக்கல்லு என்ற பாடலை பாடகி சின்மயியுடன், பாடகர் விஜய் ஏசுதாசும் இணைந்து பாடியுள்ளார். தாலாட்டுப்பாடல் போல வெளியாகியிருக்கும் இப்படலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம்

இந்த பைசன் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் லால், பசுபதி, கலையரசன் மற்றும் ரஜிஷா சஜயன் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க முழுக்க கபடி மற்றும் பகை போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம்.

இதையும் படிங்க : வாத்தி படத்திற்காக தேசிய விருது.. குடியரசு தலைவரின் கையால் விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார்!

இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துருவ் விக்ரமின் இப்படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.