Dhanush: ரூ 100 கோடியை நெருங்கும் தனுஷின் தேரே இஷ்க் மே.. 5 நாட்களில் மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

Tere Ishq Mein Box Office: தமிழில் சிறந்த நாயகன் மற்றும் இயக்குநராக இருப்பவர் தனுஷ். இவரின் பிரம்மாண்டமான நடிப்பில் இறுதியக வெளியாகியுள்ள படம்தான் தேரே இஷ்க் மே. இப்படமானது வெளியாகி 5 நாட்களைக் கடந்த நிலையில், உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Dhanush: ரூ 100 கோடியை நெருங்கும் தனுஷின் தேரே இஷ்க் மே.. 5 நாட்களில் மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

தேரே இஷ்க் மே திரைப்படம்

Published: 

03 Dec 2025 16:58 PM

 IST

பான் இந்தியா வரை மிகவும் பிரபலமான நாயகனாக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழியை தவிர ஆங்கில மொழியிலும் படங்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட் படத்திலும் அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்தி மொழியை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான 3வது படமாகும். இதற்கு முன் குபேரா (Kuberaa) மற்றும் இட்லி கடை (Idli Kadai) போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் கடந்த 2025 ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் இந்த தேரே இஷ்க் மே படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியுள்ளார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் (Kriti Sanon) நடித்திருந்தார்.

இப்படமானது அதிரடி காதல் மற்றும் தற்போதுள்ள ஜெனரேஷனின் காதல் எப்படி உள்ளது என்பது தொடர்பான கதையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படமானது இந்தியில் மட்டுமே சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், 5 நாட்களில் இந்தியா முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் மொத்தம் சுமார் ரூ 72.71 கோடிகளை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஓவர்.. நியூ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படக்குழு!

தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் 5வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் வரவேற்பை பெறாத தேரே இஷ்க் மே:

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக அறியப்படுகிறார். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான 3வது படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படமானது சமீபத்தில் வெளியான நிலையில், தமிழ் மக்களிடையே பெருமளவு பேசப்படவில்லை. இதற்கு காரணமாக என்ன தெரியுமா?. பொதுவாக தனுஷின் திரைபடங்களுக்கு தமிழில் ப்ரோமோஷன் பணிகள் நடப்பது வழக்கம். இறுதியாக வெளியான குபேரா மற்றும் இட்லி கடை போன்ற படங்களுக்கும் ப்ரோமோஷன் தமிழகத்தில் நடந்தது.

இதையும் படிங்க: எனது படங்களை எடுப்பதற்கு முன் கமல்ஹாசனின் அந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்- மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்!

ஆனால் இந்த தேரே இஷ்க் மே படத்திற்கு தமிழகத்தில் எந்தவித ப்ரோமோஷன் பணிகளும் நடக்கவில்லை என்பதே உண்மை. இதனால இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது கூட பல ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாக தனுஷின் இப்படத்திற்கு தமிழகத்தில் பெருமளவிற்கு வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் நடிப்பில் மேலும் புதிய படங்கள் உருவாகிவருகிறது என்பது தெரிந்ததே.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!