D 54 படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!
Dhanush D54 Movie Update: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரு டி54 படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் 54
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேபைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இட்லி கடை, குபேரா மற்றும் தேரே இஸ்க் மெய்ன் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தபப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று சாதனைப் படத்தைது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது 54-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் கூட்டணி சேர்ந்தார். இயக்குநர் விக்னேஷ் ராஜா கடந்த 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான போர் தொழில் என்ற சைக்கோ த்ரில்லர் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியால் தமிழகம் முழுவதும் பிரபலமான இயக்குநராக மாறினார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை தொடங்கிய D 54 படக்குழு:
அதன்படி தற்போது D 54 என்று அழைக்கப்படும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்கியதாக புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Dhanush‘s #D54 post production kickstarted ✅🔥
Film gearing up for Summer 2026 release !!
Directed by PorThozil fame VigneshRaja 🎬 pic.twitter.com/lNKLXGBDX1— AmuthaBharathi (@CinemaWithAB) January 1, 2026