Dhanush: இட்லி கடைக்கு கிடைக்கும் வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
Dhanush Thank To His Fans: நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்தான் இட்லி கடை. இந்த படமானது 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியான நிலையில், ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷின் இட்லி கடை திரைப்படம்
கடந்த 2025 அக்டோபர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கி, நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக படப்பிடிப்புகள் நடைபெற்றுவந்தது. இந்த படமானது முதலில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையாத நிலையில், படக்குழு பின் ரிலீஸ் தேதியை 2025 அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றியது. இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்திருந்தார். இந்த படமானது ஃபீல் குட் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடிகர் தனுஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவது ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தனுஷ், “எங்களின் இட்லி கடை படத்திற்கு, நீங்கள் காட்டும் அளவுகடந்த அன்பிற்கு, பாசத்திற்கு மிகவும் நன்றி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆயிரக்கணக்கானோரின் கனவு.. காந்தாரா படக்குழு வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Thank you all for the overwhelming love and affection towards our Idli kadai ❤️ Blessed. Grateful. 😇🙏 pic.twitter.com/xdIr6Zr3u0
— Dhanush (@dhanushkraja) October 2, 2025
இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
தனுஷின் இந்த இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி நிறுவனமானது பெற்றுள்ளது. இந்த படமானது வெளியாகி 4 முதல் 6 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
தனுஷின் இட்லி கடை படத்தின் வசூல் விவரம் :
நடிகர் தனுஷின் இந்த படமானது உணவகம் மற்றும் கிராமத்து கதைக்களம் தொடர்பான படமாக வெளியாகியுள்ளது. இதில் தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி , இளவரசன் மற்றும் பார்த்திபன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். முற்றிலும் பீல் குட் திரைப்படமாகவே இந்த இட்லி கடை படமானது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தென்னாடு தேசத்துல வாழும் கூட்டம்… பைசன் பட தென்னாடு என்ற பாடல் வெளியானது!
இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் மற்றும் இந்தி மொழியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த இட்லி கடை படமானது வெளியாகி 2 நாட்களை கடந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இந்த படமானது இதுவரை மொத்தமாக ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.