வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வட சென்னை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது - சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!

வடசென்னை

Published: 

25 Sep 2025 13:15 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வட சென்னை. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், பவன், ஐஸ்வர்யா ராஜேஷ், சுபத்ரா ராபர்ட், சாய் தீனா, ராதா ரவி, சுப்பிரமணிய சிவா, வின்சென்ட் அசோகன், ராஜேஷ் சர்மா, சரண் சக்தி, ஹரி கிருஷ்ணன், பாவெல் நவகீதன், ராகவேந்தர், மூணார் ரமேஷ், ஜி.மாரிமுத்து, சம்பத் ராம், சென்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். க்ரைம் ட்ராமா பாணியில் வெளியான இந்த வட சென்னை படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், லைகா புரொடக்ஷன்ஸ், கிராஸ் ரூட் திரைப்பட நிறுவனம் ஆகியவற்றின் சார்பாக தயாரிப்பாளர்கள் தனுஷ், சுபாஸ்கரன் அல்லிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அடுத்தப் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று தனுஷ் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் எப்போது?

அதன்படி நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பேசியபோது வட சென்னை 2 படம் அடுத்த 2026-ம் ஆண்டு தொடங்கும் என்றும் வருகின்ற 2027-ம் ஆண்டு படத்தின் ரிலீஸ் இருக்கும் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் பேச்சு:

Also Read… மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் காலமானார்