என் சிறு வயது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதுதான் இட்லி கடை படம் – தனுஷ் சொன்ன விசயம்

Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் இட்லி கடை. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் அவரது உண்மை வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

என் சிறு வயது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதுதான் இட்லி கடை படம் - தனுஷ் சொன்ன விசயம்

தனுஷ்

Published: 

15 Sep 2025 11:33 AM

 IST

நடிகர் தனுஷின் (Actor Dhanush) 52-வது படமாக உருவாகியுள்ளது இட்லி கடை. இந்தப் படத்தை தனுஷே எழுதி இயக்கி உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் தமிழக மக்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக நடிகர் தனுஷின் ரசிகர்கள் அடுத்ததாக அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் இயக்குநராகவும் படங்களை இயக்கி வருகிறார். அதன்படி முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள 52-வது படமாகவும் இயக்கத்தில் 4-வது படமாகவும் தயாரகியுள்ள இட்லி கடைப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படம் திரையரங்குகளில் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்ன வயசுல இட்லி சாப்பிட காசு இருக்காது:

இந்த நிலையில் நேற்று 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

அதில் நடிகர் தனுஷ் பேசியபோது என்னோட சின்ன வயசுல தினமும் இட்லி சாப்பிட எனக்கு ஆசையா இருக்கும். ஆனா அதுக்கு காசு இருக்காது. அப்போ நானும் என் 2 அக்கா எல்லாம் வயல்ல போய் பூ பறிச்சு வேலை செஞ்சு 2 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அத வச்சு நாங்க இட்லி சாப்பிடுவோம். அந்த கடையில நான் சாப்பிட்ட இட்லியோட சுவை இப்போ எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டாலும் கிடக்கல என்றும் அந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்தே இந்தப் படத்தை இயக்கி உள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Also Read… திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது தலைவன் தலைவி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் பேச்சு:

Also Read… நான் கண்ணால பாத்த அதிசிய மனிதர் இளையராஜா – ரஜினிகாந்த் புகழாரம்