இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

Idly Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான குபேரா படம் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத நிலையில் அவரது ரசிகர்கள் அடுத்ததாக அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

இட்லி கடை

Published: 

21 Jul 2025 18:29 PM

கோலிவுட் சினிமாவில் நடிகர் தனுஷ்  (Actor Dhanush) நடிப்பில் இந்த ஆண்டு ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை (Idly Kadai Movie). கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டே வெளியாக இருந்த இந்தப் படம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைய தாமதம் ஆனதால் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிது நாட்களிலேயே படத்தின் மற்றொரு வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இட்லி கடை படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற 27-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு இட்லி கடை படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இட்லி கடை படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்:

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம்:

நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆகி அவர் இயக்கும் 4-வது படம் இட்லி கடை. பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அந்தப் படத்தில் நடிக்கவும் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தனது 50-வது படமான ராயனை தானே இயக்கி நடித்து இருந்தார் நடிகர் தனுஷ். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கடந்த ஆண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியளில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் தனுஷ் நடிக்கவில்லை இயக்குநராக மட்டுமே பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை.

இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நடிகர் தனுஷிற்கு நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், ராஜ் கிரண் என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.