Kuberaa OTT Update : தனுஷ் – ராஷ்மிகா மந்தனாவின் ‘குபேரா’ – ஓடிடி ரிலீஸ் எப்போது?

Kuberaa Movie OTT Release Date Update : நடிகர் தனுஷின் 51வது திரைப்படமாக வெளியான படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் திரையரங்க ரிலீஸை தொடர்ந்து, ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kuberaa OTT Update : தனுஷ் - ராஷ்மிகா மந்தனாவின் குபேரா -  ஓடிடி ரிலீஸ் எப்போது?

குபேரா திரைப்படம்

Published: 

11 Jul 2025 16:10 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர பிரபலங்களில் ஒருவர்தான் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணி இப்படத்தில்தான் முதன் முறையாக இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷிற்கு இணையான ரோலில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) நடித்திருந்தார்.

இவர்கள் இருவரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில், உலகமெங்கும் வெளியானது. இப்படமானது வெளியாகி 4 வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதியில், ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விவாகரத்து தொடர்பான வதந்தி.. ஸ்டைலாக பதிலளித்த நயன்தாரா!

குபேரா திரைப்படம் எந்த ஓடிடியில் வெளியாகிறது :

தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குபேரா. இந்த படமானது மொத்தமாக சுமார் ரூ. 132 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :  சினிமா என்பது ஒரு கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் பேச்சு!

அமேசான் பிரைம் வெளியிட்ட குபேரா ஓடிடி ரிலீஸ் :

இந்த குபேரா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் நடிப்பில், இந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. தனுஷின் கைவசத்தில் மட்டும் சுமார் 9 படங்களுக்கும் மேல் உள்ளது. அதில் இந்த 2025ம் ஆண்டு இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெய்ன் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் விடுதலையாகவுள்ளது.

தமிழில் உருவான இட்லி கடை படமானது வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியிலும், இந்தியில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் படமானது வரும் 2025, நவம்பர் 27ம் தேதியிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.