3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

3 Years Of Thiruchitrambalam Movie: நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நித்யா மேனன் முதன் முறையாக கூட்டணி வைத்து நடித்தப் படம் திருசிற்றம்பலம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

திருச்சிற்றம்பலம்

Published: 

18 Aug 2025 20:04 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் கூட்டணி முதன்முதலில் இந்தப் படத்தில் தான் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், ஸ்ரீரஞ்சனி, ஸ்டண்ட் சில்வா, அறந்தாங்கி நிஷா, வி ஜே பப்பு, விக்ரம் ராஜா, ஏ. ரேவதி, மு ராமசுவாமி, ரேவதி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைத்து இருந்தார். திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகக்து.

திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என்ன?

நடிகர் தனுஷ் தனது தந்தை பிரகாஷ் ராஜ் மீது இருந்த கோபத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஃபுட் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார். காவல்துறை அதிகாரியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் மீது தனுஷிற்கு கோபம் ஏற்பட காரணம் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது போன் பேசிக்கொண்டே பிரகாஷ் ராஜ் காரை ஓட்டுவார். இதனால் விபத்து ஏற்பட்டு அதில் தனுஷின் தாய் ரேவதி மற்றும் தங்கை இருவரும் உயிரிழந்துவிடுவார்கள். இதனால் தனது தந்தை மீது கோவித்துக்கொண்டு பல ஆண்டுகளாக பேசாமல் இருப்பார்.

இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நடிகர் பிரகாஷ் ராஜின் தந்தையாகவும் நடிகர் தனுஷின் தாத்தாவாகவும் நடித்து இருப்பார். தனுஷ் வாழ்க்கையில் பல இடங்களில் மாற்றம் வர காரணமாக இந்தக் கதாப்பாத்திரம் அமைந்து இருக்கும். மேலும் தனுஷ் குடியிருக்கும் கோட்ரஸில் தான் நடிகை நித்யா மேனனும் குடும்பத்துடன் தங்கியிருப்பார்.

Also Read… சூர்யாவின் 47-வது படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுதான்… வைரலாகும் தகவல்

தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் சிறு வயதில் இருந்தே பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்களாக இருப்பார்கள். ஆனால் பள்ளி படிக்கும் போதே நித்யா மேனனுக்கு தனுஷ் மீது காதல் ஏற்பட்டுவிடும். ஆனால் அதனை தனுஷிடம் கூறாமல் ஒரு நல்ல தோழியாகவே இருந்து வந்தார். இறுதியில் நித்யாமேனனின் காதல் நடிகர் தனுஷிற்கு புரிந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

திருச்சிற்றம்பலம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் பாலன்… அப்டேட் இதோ!